Tamilisai Soundararajan: அன்னபூர்ணா விவகாரம்..! அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே..!’’

அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோயம்புத்தூர் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ‘‘பெரிய நிகழ்ச்சிகள் 2 மாதங்களுக்கு நடத்த வேண்டாம் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக இருக்கிறோம். அண்ணாமலை பார்ட் டைம் ஆக அரசியல் பணியாற்றவில்லை. புல் டைம் ஆக பணியாற்றி வந்தவர்.

தற்போது, அண்ணாமலை படிக்க சென்று இருக்கிறார். படித்துவிட்டு வரட்டும். பாஜக சார்பில் எப்போதும் போல் பணியாற்றி வருகிறோம். அதற்குள் என்ன பிரச்னை உங்களுக்கு. பிரச்னை இல்லாமல் இருப்பதுதான் உங்களுக்கு இப்போது பிரச்னையாக இருக்கிறதா?. பாஜகவில் பிரச்னை எதுவும் இல்லை’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

மேலும், ‘‘அண்ணாமலை இல்லை என்பதால் பிரச்னை இல்லையா?’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் ஏதாவது பிரச்னை செய்யாதீர்கள்’’ என்றார். ‘‘அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவை வானதி நாங்கள் வெளியிடவில்லை என கூறிய நிலையில், அண்ணாமலை வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாரே’’ என கேள்வி எழுப்பியபோது, ‘‘உட்கட்சி ரீதியான விஷயத்திற்கு பதில் அளிக்க முடியாது. பிரச்னை, பிரச்னை என கூறி ஏதாவது பிரச்னை உண்டாக்கி விட்டுவிடாதீர்கள்’’ என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

தொல். திருமாவளவன்: கூட்டணியில் ஒண்ணுமே நடக்கவில்லை அதனால் தமிழிசை சௌந்தரராஜன் வயிற்றெரிச்சல்

“மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார்” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை தமிழிசை சௌந்தரராஜன் முன் வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல். திருமாவளவன், பெரியார் திடலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். அதை வரவேற்றுப் பாராட்டி, சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்தேன். சமூக நீதி பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது.

பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கானது மட்டுமல்ல, சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

திராவிட பாதையில் வந்தால் திராவிட கட்சிகள் வளரவிடாது என பாஜகவினர் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை தரக் கூடிய அரசியல் தான். பெரியார் என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. சட்டப்பேரவையில் பெரியார் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அந்தளவுக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது.

தங்களுக்கு எதிரான அரசியலை பேசுவது புரிந்தும் விசிக மாநாட்டுக்கு திமுக வருகிறது என்றால் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதே பொருள். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க வேண்டும். தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கிறோம். இது ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சொன்னது தான் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்

Tamilisai Soundararajan: விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார்..!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

Tamilisai Soundararajan: சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார்..!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்: திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடக அரசியல் அம்பலமாகிவிட்டது..!

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாட்டை அறிவித்து அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறும்போது எங்கள் கூட்டணியில் விரிசல் இல்லை. மதுவிலக்கு மாநாட்டில் திமுக பங்கேற்கும் என்றார்.

மாறி மாறி பேசும் இந்த முரண்பட்ட கருத்துக்கள் பற்றி தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது. ஆளும் கட்சியினரே 40 சதவீத மது ஆலைகளையும் நடத்துகிறார்கள். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பீர்கள்.

மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும் பாராளுமன்றத்தில் தேசிய மதுவிலக்கு பற்றி திமுக என்றாவது பேசியதுண்டா? இப்போது விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்பிக்கள் இருக்கிறார்கள். தேசிய மதுவிலக்கு பற்றி பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லையே ஏன்?

அப்பட்டமான உங்கள் அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது. திமுக கூட்டணியில் அஸ்திவாரத்தில் குழி பறித்து அசைத்து பார்க்க நினைத்தீர்கள். அது பலிக்கவில்லை என்றதும் எல்லாவற்றையும் மடை மாற்றி மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகிறீர்கள். இதையே தான் நீட் விவகாரத்தில் செய்தீர்கள்.

புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகிறீர்கள். இப்போது மது விலக்கையும் உங்களாலோ உங்கள் கூட்டணியாலோ கொண்டு வரமுடியாது என்றதும் மடை மாற்றுகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

“பாத பூஜை” கலாச்சாரம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுக்கு தமிழிசை எதிர்ப்பு..!

ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் சென்னை வித்யா மெட்ரிக் பள்ளி  மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தது கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வித்யா மெட்ரிக் பள்ளி ஒன்றில் ஆசிரியர் தினத்தையொட்டி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் என்று தெரியவில்லை.

ஆசிரியர்களை கொண்டாட வேண்டும். நாங்கள் கொண்டாடும் வகையில் யாரும் கொண்டாடியதில்லை. ஆனால், அவர்களின் பாதங்களை கழுவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார், அதோடு, இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ஆன்மிகம் இல்லாத அரசியல் இப்போது செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்: விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது..! இங்கே விடியுமா என்று தெரியவில்லை.!

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் முதலமைச்சரின் அமெரிக்க ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளவை. எனவெ அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தால் நல்லது தான்.

புதிய கல்வி கொள்கை குறித்த கேள்விக்கு, புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். எப்போதும் அளிக்கப்படும் கல்விக்கான நிதியை மத்திய அரசு குறைக்கவில்லை. மேலும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், விடியல் அமெரிக்காவுக்கு போய் இருக்கிறது. இங்கே விடியுமா என்று தெரியவில்லை என பதிலளித்தார்.

அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம்..!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், புதுச்சேரி புதுடெல்லி போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்களை களத்தில் இறக்கி அரசியல் செய்வதும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதையும் மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆளுநருக்கு தனியாக அதிகாரமில்லை என்றும் உச்சநீதிமன்றமே பலமுறை குட்டு வைத்தும் மாறவில்லை.

தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ், முதலமைச்சராக இருந்தபோது தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தினத்தின்போது அழைக்காததால் கவர்னர் மாளிகையிலேயே கொடியேற்றிவிட்டு புதுவைக்கு வந்து கொடியேற்றினார். பெரும்பாலான நாட்கள் புதுச்சேரியில் தங்கி அரசு நலத்திட்ட விழாக்களில் கலந்து கொண்டு பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ந. ரங்கசாமி அறிவிப்புக்கு முன்பே தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து விடுவார். அதிகாரிகள் இடமாற்றம் கூட முதல்வருக்கு தெரியாமல் நடந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

கடந்த வாரம் நடந்த அரசு விழாவில், புதுச்சேரியின் அதிகாரிகள், ஊழியர்கள், மக்களுக்கு திட்டப்பணிகளை செய்வதில்லை. வெளியே வருவது கூட கிடையாது. அடுத்தவர் மீது பழிப்போட்டு அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர்’ என தமிழிசை முன்னிலையிலேயே முதலமைச்சர் ந. ரங்கசாமி கதறினார். தலைமை செயலர் மற்றும் செயலர்களை கையில் வைத்து கொண்டு அரசு நிர்வாகத்தை முடக்கி வருகிறார். முதலமைச்சர் ந. ரங்கசாமியை டம்மி செய்துவிட்டு பாஜகவை வளர்க்க பார்க்கிறார் என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளும்கட்சியே புகார் சொல்லிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் பணி காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி அல்லது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். கடந்த மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டபோது மறுக்காமல் சஸ்பென்ஸ் கூறி முடித்தார்.

தமிழகத்தில் நடைபயணம் செல்லும் அண்ணாமலை, அவ்வப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பாஜக தலைமைக்கு விசுவாசத்தை காட்டுவார். அதற்கு ஒருபடி மேலாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய ஒரு வாரத்துக்கு பிறகு ஆறுதல் கூற சென்றுள்ளார். அப்போது தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. ‘இரண்டு மாநிலத்துக்கு ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் அங்கே இருப்பதில்லை. மாறாக தமிழ்நாட்டில்தான் பெரும்பாலும் முகாமிட்டுள்ளார்.

தான் இன்னும் தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்கிறார். அரசியல் ஆசை இருந்தால் அரசியலமைப்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு பிரசாரம் செய்யலாம். பாஜகவின் ஏஜெண்டாகவும், மோடியின் கைக்கூலியாகவும் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போதும் முகாமிட்டு இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது எங்கும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. தற்போது அவர் மேற்கொண்ட தென் மாவட்ட விசிட் தேர்தல் சீட்டுக்கான விஜயம் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மனம் விட்டுப் பேச…மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்தது கடிதம் எழுதுங்கள்

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் சிறப்பு அஞ்சல் உறைகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் “புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவதாகும்.

புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுவையில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்திருக்கிறது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.  நமக்கு வேண்டியவர்களிடம் மனம்விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன. கரோனா பெருந்தொற்று, கை-கால்கள் கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க-வழக்கங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்” என தெரிவித்தார்.