ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய எடப்பாடி  பழனிசாமி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது.

தி.மு.க அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது. ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும். நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும்

அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில்,பொறியியல் படிப்பிற்க்கான சேர்க்கை ஆணைகளை வழங்கி, அவர்களின் கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நெத்தியடி

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற நிலையில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தை பாதுகாக்கும் விதமாக அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட் கொண்டு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்தார்.

இந்த சூழலில் அதே மு.க.ஸ்டாலின் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளபோது போதை பொருள் விவகாரத்தை கையில் எடுத்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை கேள்வியால் மடக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலரையும் ஆச்சரியப்படும் விதத்தில் புள்ளி விபரங்களுடன் அதுதொடர்பான, பதிலை புட்டுபுட்டு வைத்தார். கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த நெத்தியடி பதிலுக்கு எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு : மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்

சென்னை அண்ணா நினைவக வளாகத்தில் 39 கோடியில் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த உத்தம தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே  2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று  சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை — தங்கமகன் நீரஜ் சோப்ரா — கலைஞரின் கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

திமுகவிற்கு சவால் விடும் அண்ணாமலை — தங்கமகன் நீரஜ் சோப்ரா — கலைஞரின் கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

திமுகவிற்கு சவால் விடும்: அண்ணாமலை

“வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… மக்கள் மனதில் நின்றவர் யார்..?”

இறுமாப்பு தடாலடி இரண்டையும் தனக்குள்ளே கொண்டு சோதனைகளை தகர்த்தெறிந்து தன்னந்தனியே பிரசாரத்தால் முடியடிப்பவர்


2016 மார்ச் 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரசாரக் கூட்டத்தில் எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும் அதைப்பற்றி நூறு தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள் தான் இந்த ஜெயலலிதா


ஜெயலலிதா தனது அரசியல் குருவிடம் கற்ற திமுக எதிர்ப்பு அரசியல் மற்றும் நான் தமிழக முதல்வராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் கவியையும் விடமாட்டேன் காவி அணிந்த பவியையும் விடமாட்டேன் என்ற மாய விதையை கையில் எடுத்து


தமிழகத்தை 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவந்த அதிமுக அதாவது ஜெயலலிதா கூடவா பெட்ரோல் டீசலை GST குள் கொண்டு வருவது GST குறித்து கூட்டத்தில் பேசவில்லை

பெரியாரின் கொள்கைகளை மனதிலே சுமந்து…அண்ணாவின் சிந்தனைகளை மனதிலே சித்தரித்து…கலைஞரின் பகுத்தறிவை மனதிலே பகுத்து… நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை ஏ. சந்தோஷ்

பெரியாரின் கொள்கைகளை

                              மனதிலே சுமந்து…

அண்ணாவின் சிந்தனைகளை

                             மனதிலே சித்தரித்து…

கலைஞரின்  பகுத்தறிவை

                             மனதிலே பகுத்து…

நல்லாட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வரே வாழ்த்தி வணங்குகிறோம்..! சைதை . சந்தோஷ்ex .Mc

தெற்கே உதித்த சூரியனே தீயவைகளை சுட்டெரித்திட தீண்டாமையை ஒழித்திட தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட நல்லாட்சி நல்கிடு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ்

தெற்கே உதித்த சூரியனே

தீயவைகளை சுட்டெரித்திட

தீண்டாமையை ஒழித்திட

தமிழகத்தை தலை நிமிர்ந்து செய்திட

நல்லாட்சி நல்கிடு

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் வட்டம், குருக்கபுரம் கிராமம் கிருஷ்ணவேணி செல்வராஜ் மற்றும் சித்ரா ஜெயராமன்

சன்ச்சர் நிகாம் ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கத்தின் சார்பாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதி