ஆர்.பி. உதயகுமார்: முதல்வர் அதிகாரத்தை உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கொண்டார் ..!

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “திமுக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விருதுநகர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அவசர கதியில் மக்களுக்கு உணவை அள்ளிக் கொடுத்து இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்க முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். யார் உணவு அளித்தாலும் எச்சரிக்கையோடும் கவனத்தோடும் கையாள வேண்டும். கரோனோ காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் 9 மையங்களில் 3,200 கரோனா தொற்றாளர்களுக்கு 5 மாதம் பாதுகாப்பாக உணவளிக்கப்பட்டதை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் மதுரையில் மாநாடு போன்று நிகழ்ச்சி நடத்தினார். அவர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற வருவாய்த்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம் செய்கிறார்கள். முதல்வர் தான் அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த முடியும். ஆனால், ஒரு துறையின் அமைச்சர் எவ்வாறு அனைத்துத் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தலாம்?அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி செயல்படுகிறார். அவருக்கு எப்போது முதலமைச்சர் அதிகாரம் வழங்கப்பட்டது? முதல்வர் அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை அவருக்காக செயல்படுத்துவது தவறான முன்னுதாரணம்” என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: சீமான் ஏன் தேவையில்லாமல் கருத்துக் கூறுகிறார் என தெரியவில்லை..!

மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான். இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 20 சிறுவர்கள் உட்பட 36 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1,000 நிதி உதவியளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மது ஒழிப்பு மாநாட்டுக்கு தொல்.திருமாவளனன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதில் கூற வேண்டியது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தான்.

இதுதொடர்பாக சீமான் ஏன் கருத்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை. பூரண மது விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகளும், பழனிசாமி முதல்வராக இருந்தபோது 500 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது அதிமுகவுக்கு திருமாவளனன் விடுத்துள்ள அழைப்பு தமிழக அளவில் பெரும் அதிர்வலையை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் ஒருவர் மாநாடு நடத்தினால் தேவையில்லாத கேள்விகள் கேட்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

‘அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்’ செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டால், குற்றவாளிகள் தங்கள் நிலையை மறந்து திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றனர்.

11.9.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது, “தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், இதனை கட்டுப்படுத்த முடியவில்லையெனில் சிறப்புக் குழு போடுவோம்” என்று திமுக அரசை எச்சரித்துள்ளது. இதுபோன்ற நிலைமை இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டதில்லை.

ஊடகங்களில் நாள்தோறும் வரும் செய்திகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். தங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் அன்றாடம் அல்லல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. அந்த வகையில், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளில் ஒருசிலவற்றை
இங்கே குறிப்பிடுகிறேன்.

  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தேசிய மாணவர் படை பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று புகார்.
  • கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு (12 வயதுக்குட்பட்ட 9 மாணவிகளுக்கு) பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் நடராஜன்.
  • சிவகங்கை, மாவட்டம் காரைக்குடி அருகே 3 ஆம் வகுப்பு மாணவிக்கு, முத்து என்ற 72 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மேலும் பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
  • கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக பேராசிரியர்கள் சதீஸ்குமார், ராஜபாண்டி, முரளிராஜ் மற்றும் லேப் டெக்னீஷியன் அன்பரசு ஆகிய 4 நபர்கள் மீது மாணவிகள் புகார்.
  • திருச்சி, மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்திற்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன் டேனியல் (வயது – 31) லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பள்ளி ஹாஸ்டலில் தங்கியுள்ள விடுதி மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல 6 மாதங்களாகவே, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் மீது புகார்.
  • 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பிரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அமைச்சர் ஒருவரின் ஓட்டுநர் எனக் கூறி அவரது 5 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார்.
  • சென்னை அண்ணாநகரில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்ததையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன்.

சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 – செவ்வாய் கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் அதிரடி: “மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான்”

மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக.

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என ராமதாஸ் தெரிவித்தார்.

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்காலம்..! அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும்..!

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தெரிவித்தார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். ஆனால் வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள்.வந்த உடன் இங்க என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது, இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்களின் புதிய சிந்தனை மற்றும் ஆற்றலை கட்சியில் இணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், கட்சியை இன்னும் வெற்றிகரமாக நடத்த முடியும் என துரைமுருகன் தெரிவித்தார்.

சீமான் கேள்வி: திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா..?

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு தான் திமுக அரசு என சீமான் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யால், தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது..!

“நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. உச்சத்தில் இருந்தவர் விஜயகாந்த். எதிர்கட்சி தலைவராக இருந்தவர். அவராலும் வெற்றி அடைய முடியவில்லை என ராம.சீனிவாசன் பேசினார்.

பாஜக விமர்சனம்: “திமுக பேருந்தில் பயணம் ஆனால் அதிமுக பேருந்திற்கு துண்டு போட்டுள்ளார் திருமாவளவன்”

“திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்  என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுவிலக்கு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்; பூரண மதுவிலக்கில் உடன்பாடு உள்ள அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் யாரும் விசிகவின் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு குறித்து துறைரீதியாக ஆலோசித்த பிறகே கருத்து கூற இயலும். மக்களிடம் தங்கள் கட்சியின் கோரிக்கையை கொண்டு செல்வதற்காக விசிக மாநாடு நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் அரசுக்கு பின்னடைவு அல்ல. மது விற்பனையை இந்த அரசு தொடங்கி அதற்காக மாநாடு நடந்தால்தான் பின்னடைவு. எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம்; அவை திமுகவை எதிர்ப்பதற்கு அல்ல.

கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியலுடன் தொடர்புபடுத்தி கூறுவது தவறு. விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் முத்துசாமி பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் ‘முதலமைச்சர் கோப்பை 2024’ கோலாகலமாக தொடங்கி வைப்பு..!

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் ‘முதலமைச்சர் கோப்பை’ என்ற விளையாட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி செப்டம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 11,56,566 நபர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.