துணை முதலமைச்சர் குறித்து மு.க.ஸ்டாலின்..! நிச்சயமாக மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது…!

கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியானது.

மேலும் கடந்த 17-ந்தேதி தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய தி.மு.க.-வின் மூத்த நிர்வாகியான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

துணை முதலமைச்சர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏமாற்றம் இருக்காது என அவர் பதில் அளித்தார். அப்போது, அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது. நிச்சயமாக மாற்றம் இருக்கும். வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடு குறித்து அமைச்சர் டிஆர்பி. ராஜா விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என அனைவருக்கும் தெரியும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

L. முருகன் வேண்டுகோள்: சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்..!

குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார் .

L. முருகன் விமர்சனம்: கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை L. முருகன் சந்திததார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே என L. முருகன் தெரிவித்தார்.

L. முருகன் விமர்சனம்: மது ஒழிப்பு மாநாடு முதலமைச்சரும், திருமாவளவன் நடத்தும் ஒரு நாடகம்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை L. முருகன் சந்திததார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே என L. முருகன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: எல்லோரையும் எப்பவுமே ஏமாற்ற முடியாது..! ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும், சிலரை சிலநாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளதாகவும், கர்நாடக தொழில் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஒட்டி, சினிமா பார்த்து திரு. ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான். திரு. ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி. ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெய்ன் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, விடியா திமுக அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம், 35,520 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அம்மாவின் அரசு ‘2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. ஸ்டாலின், மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ கேலி பேசினார். நாங்கள் தொழில் முனைவோர்களையும், ‘கோட்’ போட்ட திரு. ஸ்டாலினையும் அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம்.

ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும். திரு. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக் கருத்தைக் கூறியுள்ளார்.

2019-ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய தொழில்துறை செயலாளர் திரு. ஞானதேசிகன் அவர்கள். 2019 உலக முதலீட்டாளர் (ஜிம்) மாநாட்டின் சிறப்பு அலுவலராக (Special Officer) திறம்பட பணியாற்றியவர் கூடுதல் செயலாளராக இருந்த திரு. அருண்ராய், திரு. ஞானதேசிகன்-க்கு பிறகு தொழில் துறைச் செயலாளராக திரு. முருகானந்தம் பொறுப்பேற்றார்கள்.

எனது தலைமையில், தொழில் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டினை ஈர்ப்பதற்கும் மற்றும் கொரோனா கால முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளை முன்னின்று செய்த அதிகாரிகள் திரு. முருகானந்தம், திரு. அருண்ராய் ஆகியோர்தான். 2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.

எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை, சென்னை, ஹோட்டல் லீலா பேலசில் நடைபெற்ற விழாவில் நானே தொடங்கி வைத்தேன். இந்த புள்ளி விவரங்களை அரசு கோப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும்’ ‘ஆட்சி அமைப்பு (அதிகாரிகள்) நிரந்தரமானது. ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள்’. எனது தலைமையிலான அம்மாவின் அரசில், தொழில் துறையில் பணியாற்றியவர்கள்தான், தற்போது திரு. ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் தொழில்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த திரு. அருண்ராய், இந்த ஆட்சியில் தொழில்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அன்றைய தொழில்துறை செயலாளராக இருந்த திரு. முருகானந்தம் அவர்களை, திரு. ஸ்டாலின் தொடர்ந்து தொழில்துறை செயலாளராகவும், நிதித் துறை செயலாளராகவும், தனது செயலாளராகவும் பணியமர்த்தியதுடன், தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் நியமித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதைக் கேட்டுத் தெரிந்திருந்தால் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்க மாட்டார்.

இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார்.

‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் திரு. ஸ்டாலின் மிதக்கிறார். சிலரை சிலநாள் ஏமாற்றலாம் – பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை திரு. ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய பிரபாகரன்: ஃபார்முலா 4 நடத்த யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்தீர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா கார் ரேஸ் நடத்த யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்தீர்கள்” என கேள்வி எழுப்பினார். தேமுதிகவின் 20-ஆம் ஆண்டு துவக்க விழாவையும், விஜயகாந்த்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், “வருங்காலத்தில் நம்ம எல்லாரும் பார்க்கப் போகிறோம். 2005 இந்தக் கட்சியை கேப்டன் விஜயகாந்த் ஆரம்பிக்கும் போது, அந்த மாநாட்டில் 35 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். எல்லாருமே நம்மை கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். தேமுதிக என்பது முன்பு போல் இல்லை, ஒரு சதவீத வாக்கு வாங்கி மட்டுமே வைத்துள்ளது என மக்களிடம் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.

ஆனால், இன்றைக்கும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தினமும் பத்தாயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் எப்போதும் தனக்கு பொறுப்புகள் வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்தால் போதும் எனக் கூறுவார். தற்போது நாங்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை.

விஜயகாந்த் மறைந்த பிறகு தேமுதிக என்ற கட்சி காணாமல் போய்விடும் என விமர்சனம் செய்தார்கள். அப்படியானால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை ஆரம்பித்தவர்கள் மறைந்த பிறகு இன்றளவும் செயல்பட்டு வருகிறதே எப்படி? அவர்களுக்கும் நமக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவர்களிடம் பணம் உள்ளது, நம்மிடம் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை. அதனால் தான் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா கார் ரேஸ் நடத்தினார். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இருசக்கர வாகனத்திலும், பிற வாகனங்களிலும் சென்றால் பொதுமக்களுக்கு ஓவர் ஸ்பீட் என அபராதம் விதிக்கும் அதே அரசு, சென்னையில் பார்முலா ரேஸ் என கார் பந்தயம் நடத்தி அதன் மூலமாக மக்கள் பணத்தில் 400 – 500 கோடி ரூபாய் வரை செலவு செய்து வீணாக்கி உள்ளது. யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்தீர்கள்” என விஜய பிரபாகரன் பேசினார்.

L. Murugan: “கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்துகிறார் .!”

சென்னை குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார்.இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை தந்துள்ளார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.

முதலமைச்சரையும், துணை முதலமைச்சராக வர துடித்து கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எஸ்சி, எஸ்டி விடுதியை பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக் கூடியது. பெரிய தேசம் யார் வேண்டுமானாலும் ஆளலாம். பல்வேறு சூழ்நிலை காரணமாக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் இல்லை. மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வருகிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஈவேராவிற்கு மாலை செலுத்தினார். விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சொல்லக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அவர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

ஒரே கேள்வி தான்..! சட்டென எழுந்து போன துரைமுருகன்..!

ராணிப்பேட்டை அருகே செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் இன்று பேசு பொருளாகி உள்ளது.

கடந்த காலங்களில் சினிமாவில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உதயநிதி ஸ்டாலின் வலம் வந்தார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் திடீரென தீவிர அரசியலில் இறங்கினார். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அந்த தேர்தலில் திமுக கூட்டணி , தமிழகம் புதுவையில் 40க்கு 39 தொகுதிகளில் வென்ற உறுதுணையாக இருந்தார். இதைடுத்து உதயநிதி ஸ்டாலினிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். அந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால் 2021-ல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என்று திமுகவினர் எதிர்பார்த்த நிலையில், அவர் அமைச்சராகவில்லை. எனினும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு பணிகளில் பங்கேற்று வந்தார். அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினார்கள்.

இதன்பின்னர் உதயநிதியை அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகியவை வழங்கப்பட்டன. இதில் சிறப்பு திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை என்பது தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், அனைத்து துறைகளும் உள்ளடக்கிய நிர்வாகி பணி ஆகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வசம் இருந்த இந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் உதயநிதி ஸ்டாலின் முடிவெடுக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபற்றி பலமுறை தகவல்கள் பரவி உள்ளன. ஆனால் அத்தனை முறையும் இது வதந்தி என்றே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை இதுபற்றி மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை’ என கூறினார்.

இதனிடையே மு.க. ஸ்டாலின் அமெரிக்க பயணத்துக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு விடுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கேற்ப ஆகஸ்டு 19-ந் தேதி அன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அண்மையில் கூட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், வெளியிட்ட பதிவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் திமுகவில் மூத்த அமைச்சரான துரைமுருகனை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராவதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதியை துணை முதலமைச்சராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அண்மை காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

அதேநேரம் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் எப்போது பதவி ஏற்பார் என்பது குறித்த கேள்விகளுக்கு கட்சியின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் மறுத்தே வருகிறார். ராணிப்பேட்டை அருகே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அணைகள் தொடர்பாக, நீர்பாசனம் தொடர்பாக, தர்மபுரி மக்களுக்கு காவேரி நீர் விடுவது தொடர்பாக என பல விஷயங்களுக்கு பதில் அளித்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் அந்த கேள்விக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது என சட்டென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற அமைச்சர்களை போல் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சர் ஆவார் என்பது குறித்த கேள்விக்கு , துரைமுருகன் பதில் அளிக்ககாதது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி அன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை துரைமுருகனும் முன்மொழிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள். எனவே திமுகவினர் இன்னும் ஒருவாரம் வரை அதற்கு காத்திருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பு.

Pon Radhakrishnan: உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்..!

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் மறைந்த டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் நேற்று இரவு கலந்து கொண்ட பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திருப்பதி லட்டில் கலப்படம் செய்து அதில் மிருகத்தின் கொழுப்பை வைக்கிறார்கள் என்றால் அவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டால் வாழ்த்துகள். கருத்து கூற எதுவும் இல்லை. முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் துணையாக நின்ற பல்வேறு அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்பதை திமுகவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளதாக கலைஞர் உரை..!

தந்தை பெரி­யார் பிறந்த நாள் செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15, தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட 17. 9. 1949 தினத்தையும் இணைத்து “முப்­பெ­ரும் விழா’’ முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1985 – ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்டு அன்று முதல் திமுகவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு­ பவ­ள­விழாவும் சேர்த்து கொண்டாடப்படுகிறது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பவள விழா முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக பவள விழா – முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி AI தொழில்நுட்பத்தில் கலைஞர் உரையாற்றினார்.

அப்போது, திமுகவை கம்பீரமாக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் அமர வைத்துள்ளார். 55 ஆண்டுகளாக கட்சிக்கு அயராது உழைத்தவர் மு.க.ஸ்டாலின். திராவிடச் செம்மலாய் இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக செயல்பட்டு நல்லுலகம் போற்றும் நாயகராய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி வழியில் கழக ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் என மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில், சென்னை ஒய்எம்சிஏ திடலில் தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மேலும் இந்த பிரம்மாண்ட விழாவில், பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா அவர்களிடம் பெரியார் விருதினையும், அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கு அண்ணா விருதினையும், வழங்கினார். முதலமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கலைஞர் விருதினையும், கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாவேந்தர் விருதினையும், வி.பி.ராஜன் அவர்களுக்கு பேராசிரியர் விருதினையும் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.