இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி அறைஞ்சிடுவேன் “வெளியே போ..” என ஆவேசம்..!

வங்கி பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களை அறைஞ்சிடுவேன் “வெளியே போ..” என்று பேசும் வீடியோ சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு மகளிர் சுய உதவி குழுவினர் சிலர் கடன் வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வங்கிக் கிளையில் பணியில் இருந்த பெண் அதிகாரி, பொதுமக்களை எழுந்து வெளியே போகச் சொல்லி தரக்குறைவாக பேசினாராம்.

அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அந்த பெண் அதிகாரி, அங்கிருந்தவர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் மிருகங்களா.. எதுக்கு சிரிக்குற.. அறைஞ்சுடுவேன்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.. எழுந்திருச்சு எல்லாரும் வெளியே போ.. எல்லாரும் வெளியே போனால் தான் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடையாது.. வெளியே போங்க எல்லாரும்.. இங்கு கத்திக்கொண்டிருப்பர்கள் எல்லாரும் பைத்தியமா ” என பேசும் வீடியோ சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் வாகனத்தில் மது அருந்திய SSI..! வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு..!

காவல்துறை வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை காவலர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடு வருகின்றனர்.

அந்தவகையில், கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த SSI லிங்கேஸ்வரன், காவல்துறை வாகனத்தில் சீருடை அணியாமல் அமர்ந்து, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் SSI லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், SSI லிங்கேஸ்வரன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோடு சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க..! வயதான தம்பதிகள் வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காயலான் கடை நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் காவல்துறை தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காயலான் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவல்துறை ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமூல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமூல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமூல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலைமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கணவன் மனைவி அந்தரங்க வீடியோ கசிந்தது எப்படி..!?

கன்னியாகுமரி அருகே தம்பதியின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் செல்போனில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் ஓட்டுநர்களாக மிதுன், சங்கீத் ஆகியோர் பணியாற்றி வந்தனர். டிரைவர்களாக மிதுன், சங்கீத் ஆகிய இருவரும் அந்த தம்பதியின் குடும்பத்தோடு நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தம்பதிக்கும், மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தனை தொடர்ந்து, தம்பதியின் செல்போன் எண்ணுக்கு பெயர் தெரியாத நம்பரில் இருந்து ஒரு முறை பார்த்துவிட்டு அழியக்கூடிய வீடியோ வந்தது. அந்த வீடியோவில் தம்பதி தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் இருந்தன. தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனுக்கும் இதே அந்தரங்க வீடியோ சென்றது.

பக்கத்து வீட்டினர் இந்த வீடியோ அனுப்பியது மிதுன், சங்கீத் தான் என்பதை அறிந்து தம்பதியிடம் கூறினார். இதுமட்டுமின்றி, அந்த தம்பதிக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், அந்தரங்க வீடியோவை வைத்து தம்பதியை மிரட்டி ரூ.10 லட்சம் வரை கேட்டார்களாம். இதனால் அதிர்ந்து போன தம்பதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறை மிதுன், சங்கீத் ஆகிய இருவரையும் தேடினர். ஆனால், காவல்துறை தேடுவதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினார்.  டிரைவர்கள் மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மனைவியுடன் தனிமையில் இருப்பதை கணவர் தனது செல்போனில் வைத்திருந்தாராம். ஆனால் அந்த அந்தரங்க வீடியோ அந்த செல்போனில் இருந்து மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரின் செல்போனுக்கு யார் அனுப்பினார்கள்? என்றும் ஒருவேளை கணவர் செல்போனை தனியாக வைத்துவிட்டு சென்ற நேரத்தில் இருவரும் அதனை தங்களின் செல்போனுக்கு அனுப்பி கொண்டார்களா..!? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி கல்லாக்கட்டிய ஆசாமி..!

சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வேலை செய்யும் பெண் ஒருவர், சென்னை அண்ணா நகர் சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்தார். தனது படத்தை பயன்படுத்தி, பாலியல் தொழில் செய்யும் பெண் என குறிப்பிட்டு சிலர் சமூகவலைதளம் மூலம் ஆண்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிவித்தார்.

பெண்ணின் புகாரில் பேரில் சம்பந்தப்பட்ட சமூகவலைதளத்தில் சாட் செய்தபோது, அந்த போலி பெண் ஐடி, ‘ஆபாசமாக புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றால் ரூ.500, வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் ரூ.800, தனியாக அறையில் உல்லாசமாக இருக்க ரூ.3000 செலுத்தினால் வருவேன்’ என குறிப்பிட்டது.

பணம் செலுத்துவதற்கான ஜிபே க்யூஆர் கோடை மெசஞ்சர் மூலமாக அனுப்பினர். இதைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் ஒன்று என்பதை காவல்துறை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து இந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலி சமூக வலைதளக் கணக்கை வைத்து மோசடி செய்யும் நபரை தேடிவந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணன் என்ற இளைஞர் இந்த வேலைகளை செய்து வருவதாக தெரிய வந்தது. மேலும் விழுப்புரம் மரக்காணம் பகுதியில் அவர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து செல்போன் நெட்வொர்க் மூலம் பெண் ஆய்வாளர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை காவல்துறை அவரை கைது செய்தனர்.

கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்வதில் பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி ஐடிகளை உருவாக்கி பல ஆண்களை ஏமாற்றி உள்ளது தெரிந்தது. பலரை இதுபோல் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. கிருஷ்ணன் பயன்படுத்திய போலி சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது அதில் அரைகுறை ஆடையோடு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை கிருஷ்ணன் பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கியது தெரிய வந்துள்ளது.

பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை..! சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்..!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கிய பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரம் ஆன்மிகத்துப் பெயர்பெற்ற நகரமாகும். இந்நிலையில், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய லோகேஷ் என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்ணை மது அருந்தச் செய்ததாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் பிளாட்ஃபார்மில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்காமல், பலரும் வீடியோ எடுத்ததுதான் கொடுமையான சம்பவம்.

மோடி, யோகி ஆதித்யநாத் புகழ்ந்தது தப்பா சார்…! இதுக்கு போய் முத்தலாக் குடுத்துட்டாரு..!

உத்தர பிரதேச மாநிலம் பரெய்ச் நகரைச் சேர்ந்த மரியம் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் ஆகிய இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், அர்ஷத் தனது மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், திருமணத்துக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அயோத்தி நகரின் சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் என்னைக் கவர்ந்தன. இதையடுத்து, என் கணவர் முன்பு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினேன். இதனால் கோபமடைந்த என் கணவர் என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

பின்னர் என் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி என்னை அயோத்தியில் உள்ள கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அப்போதும் என் கணவர் என்னை திட்டியதுடன், முதலமைச்சர் யோகி மற்றும் பிரதமர் மோடியையும் திட்டினார். பின்னர் மூன்று முறை தலாக் கூறி என்னை விவாகரத்து செய்துவிட்டு அடித்தார். கணவரின் தாய், தங்கை மற்றும் சகோதரர்கள் என அனைவரும் என் கழுத்தை நெரிக்க முயன்றனர். இதுகுறித்து பரெய்ச் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என மரியம் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் பெண்ணை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற ஆசாமி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்த பிரேம் ராம் மெக்வால். குடிபோதைக்கு அடிமையான இவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் போதையில் இருந்த பிரேம் ராம் மெக்வால் தனது மனைவியை தாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது கால்களை பைக்கில் கட்டி கரடுமுரடான மண் சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அப்பெண் வலியால் அலறுவது தெரிகிறது. எனினும் கிராமத்தைச் சேர்ந்த எவரும் தங்கள் வீட்டை விட்டுவெளியே வரவில்லை. சம்பவத்தின்போது மற்றொரு பெண், வீடியோ எடுத்த ஆண் உள்ளிட்ட 3 பேர் அங்கு இருந்ததாக நம்பப்படும் நிலையில் அவர்களும் இதனை தடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரேம் ராம் மெக்வாலை கைது செய்துள்ளனர்.

மாணவர்களை காலால் உதைத்த உடற்கல்வி ஆசிரியர்..! கால்பந்து போட்டியில் தோற்றதால் ஆத்திரம்..!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1,200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமன்றி தர்மபுரி மாவட்டம், நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கி இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிர்மலா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கால்பந்து போட்டி, இறுதிச்சுற்றில் நிர்மலா பள்ளியும், ஜி.வி தனியார் பள்ளியும் விளையாடின. இதில், முதல் சுற்றில் நிர்மலா பள்ளி மாணவர்கள் சரியான முறையில் விளையாடவில்லை என ஆத்திரமடைந்து, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, விளையாட்டு இடைவெளியின்போது மாணவர்களை தரையில் அமரவைத்து, “நீ என்ன மனுசனா… பொம்பளையா. ஏன்டா கால் வராதவனே… உங்களுக்கு என்னடா ஆச்சு” என்று கடும் வார்த்தைகளால், மாணவர்களைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார்.

மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து துன்புறுத்தியிருக்கிறார். இதனை பள்ளி ஆசிரியர்களும், ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கூனிக்குறுகி அமர்ந்து, கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றனர்.

இந்தக் காட்சிகள் கொண்ட வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தங்களின் பிள்ளைகளை ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்ததைப் பார்த்த பெற்றோர்கள், ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, இதுகுறித்து விசாரணை நடத்த சிஇஓ கபீருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததற்காக மாணவர்களை தாக்கியது தெரியவந்தது. மாவட்ட நிர்வாகம் உத்தரவையடுத்து அந்த ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியது. அதற்கு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து பள்ளியின் தாளாளர் கிறிஸ்டிராஜ், அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது ‘ஹோலி’ கொண்டாட்டமா..! ஆபாச காட்சிகளா…!

சமூக வலைதளங்களில் தங்களது வீடியோ வைரலாகி லைக்களை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பல வித்தியாசமான வீடியோக்கள் எடுக்கின்றேன் என்ற பணியில் உயிரை மய்த்தவர்களும் உண்டு, அந்த வீடியோக்களால் பெரிய சிக்கலில் சிக்கியவர்களை உண்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவரை மற்றொரு பெண் வீடியோ எடுக்கும் போது வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்த சம்பவம் அடங்கும் முன்னே மற்றொரு சம்பவம் அரங்கேறி இன்று பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு இளைஞனும், இரண்டு இளம் பெண்களும் ஸ்கூட்டரில் பயணம் செய்கின்றனர். அவர்கள் ஆபாசமாக நடந்து கொள்வது மட்டுமின்றி அவர்கள் ஹெல்மெட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் மற்றொரு வீடியோவில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். அவரது பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண், திடீரென பைக்கின் மீது நின்று கொண்டு ஹோலி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். திடீரென அந்த இளைஞர் பிரேக் போட்டவுடன், அந்தப் பெண் கீழே விழுந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.