வானதி சீனிவாசன்: திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது..!

இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்திரா பவனை’ திறந்து வைத்த சோனியா காந்தி..!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். புதுடெல்லி எண் 24, அக்பர் சாலையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் 9A, கோட்லா சாலை இன்று திறக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தலைமையகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மீன்பிடி துறைமுகத்தை செல்வப்பெருந்தகை ஆய்வு..!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக்கணக்குக் குழுத் தலைவருமான திரு.கு.செல்வப்பெருந்தகை ஆய்வு செய்தார்.

செல்வப்பெருந்தகை: மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான்

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, “நாட்டுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. வேறு கட்சியினரால் இதைக் கூற முடியுமா? காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கூற முடியும். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் எல்லோருக்கும் சேர்ந்த சித்தாந்தம். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடு உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு கொடி பறக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் கொடி தான்.

கூட்டணி குறித்து பேசும்போது கூட்டணி கட்சியினர் கிராம கமிட்டி உள்ளதா எனக் கேட்கிறார்கள். 100 சதவீதம் கிராமக் கமிட்டி கட்டமைப்பை உருவாக்க இருக்கிறோம். கிராம கமிட்டி மற்றும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. மற்ற கட்சியினர் எல்லாம் எங்களிடம் கமிட்டி உள்ளது என கூறுகிறார்கள். அதுபோல எங்களிடம் 100 சதவீதம் கமிட்டி இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தலைவர் ராகுல் காந்தி தான். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தலைமை ஏற்க வேண்டும். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்க வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும்” என செல்வப்பெருந்தகை பேசினார்.

செல்வப்பெருந்தகை: தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைக்க இருக்கிறோம்..!

திமுக – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சீரமைத்து, வலிமைப்படுத்துவதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சியின் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்தார். அப்போது, “தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராமக் கமிட்டிகளை அமைக்க இருக்கிறோம். சோனியா காந்தி பிறந்த தினமான டிசம்பர் 9-ஆம் தேதி கிராம தரிசனம் என்ற திட்டத்தை தொடங்கி, தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தங்கி பொதுமக்களிடம் குறை கேட்க உள்ளனர். கிராம தரிசனத்தை கன்னியாகுமரியில் முதலில் தொடங்க இருக்கிறோம். தை மாதத்தில் கிராம மற்றும் பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகவும், வலிமையாகவும், எஃகு கோட்டை போன்ற உறுதியுடனும் இருக்கிறது. இண்டியா கூட்டணியை யாரும் சிதைக்க முடியாது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. காமராஜர் தேசத்தின் சொத்து; அவரை யார் வேண்டுமானலும் கொண்டாடலாம். ஆனால், சொந்தம் கொண்டாட முடியாது. சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உண்டு. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், நல்ல திட்டங்களை கொண்டு வருவதை பாராட்டுவதும், வரவேற்பதும் தான் ஜனநாயகம். கருத்துகளை சொல்வதால், இண்டியா கூட்டணியில் பிளவு, சலசலப்பு இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பிரதமர் மோடி நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறார். இந்தியாவின் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலம் சீனா வசம் சென்று விட்டது. இந்தியாவுக்கு பாதுகாப்பு இல்லை. அந்நிய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், சீனா, பூடான், நேபாளம் ஆகியவை பகை நாடுகளாக மாறி வருகின்றன. பாஜக ஆகாய தாமரை என மாநாடு நடத்தி, மோடி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் இறக்கமாட்டார்கள் என தெரிவித்தனர்.

ஆனால், தமிழக மீனவர்கள் இன்னமும் உயிரிழந்து தான் வருகின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து, சரவணன் வெளியிட்ட அறிக்கை அவரது சொந்தக் கருத்துத்தான்; கட்சியின் கருத்து இல்லை. அமரன் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். என முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்ள இருக்கிறேன்,” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

எச்.ராஜா விமர்சனம் : காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் இலவச இணைப்புகள் ..!

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான். இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என எச்.ராஜா தெரிவித்தார்.

ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..!

அரசியல்-மல்யுத்தம் இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தங்களின் அன்பை அளித்துள்ள மக்களுக்காக நிச்சயமாக நான் பணியாற்றுவேன் என்று வினேஷ் போகத் உறுதி அளித்தார்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6015 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. வெற்றிக்கு 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் காலை 10 மணிக்குப் பின்னர் தேர்தல் முடிவுகளின் போக்கு மாறியது.

தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. 46-ஐ கடந்து முன்னிலை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் கொண்டாட்டத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி வினேஷ் போகத் செய்திருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவரது உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது தேசமே அவருக்கு ஆதரவாக நின்றது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியில் வினேஷ் போகத் இணைந்தார். அவருக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கியது.

EVKS. இளங்கோவன்: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது திமுகவிற்கு கூடுதல் பலம்..!

துணை முதலமைச்சராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர். துணை முதலமைச்சராக அவர் பதவியேற்றால் சிறந்த முறையில் பணியாற்றுவார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக. ஸ்டாலின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தேர்தலின்போது, இந்தியளவில் எதிர்ப்பு வந்தது. சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி இருந்தார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்து விமர்சனம் இரண்டு புறமும் இருக்கலாம். 471 நாள் சிறையில் ஜாமீன் கூட கொடுக்காமல், மத்திய அரசு பழிவாங்கும் செயலை செய்தது. உடல்நிலை சரியின்றி இதய பிரச்சினையில் இருந்த அவரை மத்திய அரசு வஞ்சித்தது. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைத்தது போன்று எதிர்க்கட்சியில் தலைவர்களை சிறையில் வைத்தால் அடங்கி விடுவார்கள் என, மத்திய அரசு நினைக்கிறது.

இந்திய மக்கள் ஒரு மனதாக மோடியை தூக்கி எறியவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். அந்த எண்ணம் மோடிக்கு புரிந்ததால் அவரின் முகத்தில் உற்சாகம் கொஞ்சமும் இல்லை. வெளிநாடு செல்லும்போது, மட்டும் சிரிக்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம் தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது.

திமுக பவள விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இக் கூட்டணி எண்ணிக்கைக்காக இன்றி கொள்கைக்காக சேர்ந்தவர்கள். கூட்டணி ஒன்றுபட்டு இருக்கும். தமிழக காங்கிரஸ் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்தவேண்டும் என EVKS இளங்கோவன் தெரிவித்தார்.

EVKS. இளங்கோவன்: தந்தையின் உறுதி, தாத்தாவின் கடும் உழைப்பு உதயநிதியிடம் இருக்கிறது..!

மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது..!

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே எக்ஸ் பக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.