1955 – ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து விளையாடி உள்ளது. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2 – 0 என தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.
இந்தத் தொடரின் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா இருந்தது. ஆனால், அந்த சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது