H. ராஜா: கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள்..! இசைவாணியை கைது செய்யவில்லை…!

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லைஎன பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். பாஜகவின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கதிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் H. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,” சமூக வலைதளங்களில் ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விசயமாகும்.

அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பலபேர் என்னிடம் ஐயப்பனை பற்றி பேசினால், நான் ஏசுவை பற்றி பேசுவேன் என்கிறார்கள். நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான ஹிந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் என பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களை பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும். காவல்துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என H. ராஜா தெரிவித்தார்.