ஓ. பன்னீர்செல்வம்: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறையுங்கள்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்கள் ஏற்கெனவே பல வரிகளால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கிள்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை 01-09-2024 முதல் உயர்த்த இருப்பதாக வந்துள்ள செய்தி போதிச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் போவையில் கொண்டு வரப்பட்ட ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 15 அங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்றாண்டுகள் கழிந்தும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, சுங்கக் கட்டணத்தை குறைக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, இன்று தமிழ்நாட்டில் 64 சுங்கச் சாவடிகள் இயங்கிக் கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் கட்டணமும் ஆண்டுக்காண்டு உயர்ந்த கொண்டே செய்கிறது. சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதன் நோக்கமே சாலை அமைப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான். இந்த இலக்கை எட்டிய பின், சாலை பராமரிப்புச் செலவிற்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதன்படி பார்த்தால், கட்டணத்தை குறைப்பதுதான் முறையானது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்காண்டு உயர்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த ஆண்டைப் பொறுந்தவனாபில், மக்களவை தேர்தலுக்குப் பின் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 01-09-2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 17 சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இதன் விளைவாக 150 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு, சுற்றுலாப் பயணிகள் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், சரக்கு லாரிகளின் கட்டண உயர்வுக்கும் வழிவகுத்து அதன்மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணமும் உயரக்கூடும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒன்றுக்கொன்று பின்னிப் பினைணந்தது.

ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01-09-2024 முதல் உயர்த்தப்பட உள்ள சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2035-ல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையம் அமைக்கும்..! நிலவின் 2040-ல் ஓர் இந்தியர் நிலவில் இறங்குவார்..!”

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “விண்வெளி ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. சரியாக ஓராண்டுக்கு முன் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம், சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக இறங்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. அதோடு, இந்த வரலாற்று நிகழ்வு விண்வெளி ஆய்வில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்தியது.

இந்த நிகழ்வை அடுத்தே, ஆகஸ்ட் 23 -ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும், சந்திரயான் -3 தரையிறங்கிய தளத்திற்கு ‘சிவ சக்தி பாயின்ட்’ என்று பெயரிடப்படும் என்றும் கூறினார். அதன்படி நடைபெறும் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளாக, “நிலவைத் தொடும் போது வாழ்க்கையைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பதாக அறிவிக்கப்பட்டது.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்குவதற்காக கடினமாக உழைத்தவர்கள் நமது விஞ்ஞானிகள். இந்த முழு சாதனையின் பெருமை நமது பிரதமரையே சாரும். போதுமான வளங்கள் இன்றி நமது விண்வெளித்துறை கடந்த 60 வருடங்களாக இயங்கிவந்தது. அந்த நிதி சிக்கலில் இருந்து நமது விண்வெளித் துறையை விடுவிக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

இதன் காரணமாக விண்வெளித் துறையில் 3-4 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்த விதம், அதன் விளைவுதான் இன்று உலக நாடுகளிலேயே இந்தியா விண்வெளித் துறை முதலிடம் வகிக்கிறது. அடுத்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. ககன்யான் மிஷன் என்றாலே 2025-ம் ஆண்டு நினைவில் நிற்கும். தற்போதைய எங்கள் திட்டத்தின்படி 2035-ல் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும். 2040-ல் ஓர் இந்தியர் நிலவில் இறங்குவார்” என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கருணாநிதியின் அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களையும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்புபில், தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

 

இவ்வரிசையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கியுள்ளார். கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்து, தமது கடின உழைப்பாலும் அளப்பரிய திறமையாலும் தமிழ் வளத்தாலும், தமிழகத்தில் ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்கியவர். 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என ஒரு தலைமுறை மாற்றத்துக்கு வித்திட்ட மகத்தான தலைவர்.

தமிழுணர்வு கொண்ட 14 -வது வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15 -வது வயதில் “மாணவ நேசன்” என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18 -வது வயதில் பேரறிஞர் அண்ணாவின், “திராவிட நாடு” இதழில் இளமைப்பலி என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தம்முடைய 20 -வது வயதில், திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார்.

தமது 23 -வது வயதில் ராஜகுமாரி திரைப்படத்துக்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன் முதலில் “முரசொலி” என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942 -ஆம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953 -ஆம் ஆண்டு சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960 -ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது.

அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித ராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும்; ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் – காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும்; சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Translation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன. கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் படைத்துள்ளார்.

உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ம் ஆண்டுவரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் அவர்.

எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதல்வராக மக்கள் பணி மட்டுமல்லாமல் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.

மேலும், அவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செல்போனை கொண்டு வந்தது யார்..! அரசு பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியர்..!

மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த 2-ஆம் தேதி ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல்போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர் மாணவிகளிடம் கேட்க யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 5 மாணவிகளை பாத்ரூமுக்கு ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் மல்ஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் ஷிவ்குமார் கூறுகையில், ‘‘ செல்போனை கொண்டு வந்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக ஆடைகளை களைய சொல்லி மாணவிகளுக்கு ஆசிரியர் மனரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பாலியல் ரீதியான நோக்கத்தில் இதை செய்யவில்லை என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை’’ என தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ திட்டவட்டம்: `2026 சட்டமன்றத் தேர்தல்.. அதிமுக, திமுக-வா ? என்பதுதான் மையமாக இருக்கும்..!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அ.தி.மு.க புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுக-வினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையினால் தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தபோதிலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது. வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அண்ணாமலையை அவதூறு பேசிய செல்லூர் ராஜூ மீது காவல் நிலையத்தில் புகார்..!

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் ராஜ்குமார் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மதுரை பரவை பேரூராட்சியில் கடந்த 12 -ஆம் தேதி அதிமுக கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மதுரை மேற்கு தொகுதி எம் எல் ஏ செல்லூர் ராஜூ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் தர குறைவாகவும், ஒரு சமுதாயத்தை இழிவு படுத்துகின்ற வகையிலும் விமர்சித்துள்ளார்.

இது போன்று அவர் தொடர்ந்து அண்ணாமலையை பொது இடங்களில் விமர்சித்து வருகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்:“ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு! நாட்டுக்கும் கேடு!

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே… வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!”என்று கூறினேன் என மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

தேர்தல் நடத்தை விதிமீறல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி மீது வழக்குப்பதிவு

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி நேற்று இரவு பீளமேடு ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10.40 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், இரவு 10 மணிக்கு பின்னரும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில், பீளமேடு காவல் நிலையத்தில் 341, 293, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் மீது இன்று வழக்குப் பதியப்பட்டது.

வடலூர் இத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை..!

கடலூர் மாவட்டம் வடலூர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 300 இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சிறப்புத் தொழுகை வடலூர் இத்கா மைதானத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி முகமது நபிக்கு முதல் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை வெளிப்படுத்தும் விதமாக ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏழைகளின் சுக துக்கத்தில் பங்கு கொள்ளவதை நினைவு கூறும் விதமாகவும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாகவும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிறை தென்பட்டது அடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுகிறது. வடலூர் ஜமாத் தலைவர் பக்ருதீன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் வடலூர் இத்கா மைதானத்தில் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து உலக அமைதி வேண்டியும் , சமத்துவம் சகோதரத்துவம் நிலைநாட்டவும், பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டியும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இக்தா மைதானத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வடலூர் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மு.க. ஸ்டாலின்: தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசையான பழனிசாமி..!

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, தமிழகத்தில் கடந்தமுறை ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இண்டியா கூட்டணியின் மத்திய அரசு மூலமாகத் தமிழகத்துக்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம். நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம் என்று தெரிந்து கொண்ட பழனிசாமி, இப்போது என்ன கேட்கிறார்?

மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்த திமுக என்ன சாதித்தது என்று கேட்கிறார். பலமுறை இதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். முதலில் பழனிசாமியைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படியுங்கள். பழனிசாமியால் எந்தச் சாதனையாவது சொல்ல முடியுமா? மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், அதிமுக இரண்டே இரண்டு காரியங்களைத்தான் செய்யும். ஒன்று, திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தால், அதைக் கலைக்கச் சொல்லுவார்கள். இல்லை என்றால், தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசையான பழனிசாமி என்ன உளறிக் கொண்டு இருக்கிறார்? “ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை” என்று உளறிக் கொண்டு இருக்கிறார். திமுக பிரதமர்களை உருவாக்கும் இயக்கம். குடியரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம். மத்தியில் ஜனநாயகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் திமுக. இதுதான் வரலாறு.

நீங்கள் என்ன கனவில் இருந்தீர்கள்? ஒரே நாடு – ஒரே தேர்தல் என்று பாஜக சொல்கிறது, மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் வந்துவிடும் என்று ‘இலவு காத்த கிளி போன்று’ இருந்தார் பழனிசாமி. அவர் வதந்தி கிளப்பியது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பழனிசாமி, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுகதான் மாபெரும் வெற்றி பெறும். பார்த்துக் கொண்டே இருங்கள், உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம்.

அடுத்து என்ன பேசுகிறார்? அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று சவடால் விடுகிறார். அதிமுகவை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் நீங்களும், பன்னீர்செல்வமும் , தினகரனும் அதை போட்டிப் போட்டு செய்துக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம்.

அடுத்து, விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி, ஸ்டாலினும் – உதயநிதியும் பேசவில்லை என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் உங்கள் ஆட்சியைப் போன்று, கஷ்டத்தில் இருந்தால்தானே, அவர்களின் கஷ்டங்களைப் பேசுவார்கள். திமுகக ஆட்சியில் விவசாயிகள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை? அவர்களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது மத்திய பாஜக அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் விவசாயிகள். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினால்தான், பின்வாங்கியது பாஜக அரசு. அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது மத்திய அரசு. ஆனால், அதையும் கடந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அவர்கள்மேல் இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்குச் சென்றார்?

உழவர்களுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் இந்த பழனிசாமி? மூன்று வேளாண் சட்டங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாகச் சொல்கின்றவர்களுடன் நான் விவாதிக்கத் தயார். இந்தச் சட்டம் வந்தால் தமிழக விவசாயிகள் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று வியாபாரம் செய்யலாம் என்று கப்சா விட்டவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை, அவர்கள் விவசாயிகளே இல்லை; புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி. அப்படிப்பட்டவர், இன்றைக்கு விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

திமுக ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது, மக்களும் செழிக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

உழவர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி. இன்றைக்கு திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார். சிஏஏவுக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் மேலும் தடியடி நடத்தி ரசித்து, நான் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் என்று எட்டாயிரம் பேர் மேல் எப்.ஐ.ஆர் போட்டாரே, குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது, பழனிச்சாமி என்ன செய்தார்? எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று ஆணவமாகக் கேட்டார்.

அதிமுகவும் பாமகவும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அதிமுகவும் பாமகவும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டு போட்ட பாமக இப்போது பாஜகவுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் ராமதாஸ் நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை? மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.