கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி தனபால் திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உடுமலைப்பேட்டை


கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி தனபால் திருப்பூர் தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உடுமலைப்பேட்டை

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி கிருஷ்ணவேணி செல்வராஜ் பலபாளையம் குருக்கபுரம் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்

கலைஞரின்: கொங்கு மண்டல கனவை நனவாக்கிய ஸ்டாலின்

அறம் பிறழ்கிந்தபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்று உரைத்த பகவான் கிருஷ்ணர்

ரிஷப ராசிக்கு உரித்தான தனி தன்மைகளை எடுத்து காட்டுகிறது
1967 ல் பொதுப் பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் பேருந்துகளை தேசியமயமாகி மூலைமுடுக்கெல்லாம் பேருந்து வசதி

1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது


கலைஞர் என்ற ஒற்றை சொல்லில் தமிழகத்தையே கட்டு போட்டுருக்கிறார் கலைஞர் இல்லாத இடத்தை காற்றாய் புயலாய் மக்கள் பணியாற்ற

1989 ல் கலைஞர் தேசிய அரசியலில் கணக்கை துவக்கிய மத்தியில் திமுக தயவு இல்லாமை ஆட்சி பிடிக்க முடியாது

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு

திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி அவர்களுடன் முகாம்களில் வசிப்பவர்களிடம் அடிப்படைத் தேவைகளை குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றோம். இந்தநிகழ்ச்சியில் I.P. செந்தில், M.P. வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சைலேந்திர பாபு: மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள காவல்துறையினருக்கு பயிற்சி

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு இன்று சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பேணி காக்க முன்னுரிமை வழங்கப்படும். மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று சைலேந்திரபாபு கூறினார்.

எடப்பாடி பழனிசாமி: சசிகலா 10 பேர் அல்ல 1000 பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை

சேலம் ஓமலூரில் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு எடப்பாடி நிருபர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தனர், தற்போது குழு அமைத்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி தான் செயல்படுத்த முடியும் என தெரிந்தும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

சசிகலா அ.தி.மு.க.வில் இல்லை, சசிகலாவுக்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அவர், 10 பேர் அல்ல ஆயிரம் பேரிடம் பேசினால் கூட எங்களுக்கு கவலை இல்லை. குறை சொல்வதை விட்டு விட்டு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுங்கள் எனவும் கூறினார்.

பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி: தந்தை யார் என்பதைக் கண்டறிய அதிக டி.என்.ஏ சோதனைகள் தேவைப்படும்

தென்னாப்பிரிக்கா ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதும் என உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகள் கொண்ட நாடாகும். பாலின உரிமை ஆர்வலர்கள் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இது சட்டப்பூர்வமாக்கப்படுவது குறித்து உள்துறை பாலிண்ட்ரி திட்டத்தை முன்மொழிந்து உள்ளது.


இதனால் நாட்டின் பழமைவாதிகள் மற்றும் சில மதக் குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி திட்டம் தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூசா மெசெலு, ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த மக்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? அவர்கள் அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? பெண் எப்போதும் ஆணின் ஆளுமையை எடுக்க முடியாது என தெரிவித்தார்.

இஸ்லாமிய அல்-ஜமா கட்சியின் தலைவர் கனீப் ஹென்ட்ரிக்ஸ் இது குறித்து போசுகையில், ஒரு குழந்தை பிறக்கும்போது நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள் தந்தை யார் என்பதைக் கண்டறிய அதிக டி.என்.ஏ சோதனைகள் தேவைப்படும் என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை திரும்பபெறவில்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன், என்றார்.

இந்த பேச்சு குறித்து நானா படோலே பேசுகையில், தங்களது ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டசபை கூட்டத்திலேயே தங்கர் சமூதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2014-ல் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஆனால் அவர் ஆட்சியில் 5 ஆண்டுகள் இருந்துவிட்டு தங்கர் சமூகத்தினரை முதுகில் குத்தினார்.

அதேபோல மராத்தா சமூகத்தினருக்கும் துரோகம் செய்து உள்ளார். மராத்தா இடஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் அதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதாவால் கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 55 ஆயிரம் பேர் பதவி இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் ஒரு ‘பொய் எந்திரம்’. அவரின் நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டால், அவர்கள் பட்னாவிசை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைத்து விடுவார்கள் என நானா படோலே தெரிவித்தார்.

E.R. ஈஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாரத பிரதமர் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது மட்டும் போதாது. ஒன்றிய அரசு தமிழ் மொழியை பாரதத்தின் ஆட்சி மொழியாக்கி தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமங்கலியத்திற்கு தங்கத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பொன்னுசாமி. பெ .ராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.