விஜயலலிதாம்பிகை தலைமையில் தொடரும் ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் பல மாதங்களாகவே மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக அவினாசிபாளையம், செட்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள் எனபத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்படும் Fostac பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரித்தால் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைகளுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பெண்

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா. இவர் மீது ஓட்டேரி, பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெடுங்குன்றம் 9-வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி விஜயலட்சுமி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். அதன்பின்னர் அங்கு வந்த ஓட்டேரி காவல்துறை சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை கஞ்சா வழக்கில் கைது செய்து செங்கல்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் விஜயலட்சுமி தனது வக்கீல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தார். விஜயலட்சுமியை எதிர்த்து தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சி சார்பிலும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவில் உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மாநில புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, பிராந்திய புலித் திட்டங்கள் மற்றும் வனவிலங்கு & பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுக்க …! மீண்டும் துடைப்பத்தை கையிலெடுத்த பிரியங்கா காந்தி…!

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது காவல்துறையினர், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து, சித்தாப்பூர் விருந்தினர் மாளிகையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டபோது அங்குள்ள அறையை சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதனை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்து இருந்தார்.”மக்கள் அவர்களை இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ளவர்களாக மாற்ற விரும்புகின்றனர். அதற்குதான் அவர்களை உருவாக்கியுள்ளனர். மற்றவர்களுக்கு தொல்லை தருவதற்கும் எதிர்மறை கருத்துகளை பகிர்வது மட்டுமே இவர்களின் பணி. இவர்களுக்கு வேறு வேலையே இல்லை” என கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இன்று தலித்துகள் வசிக்கு காலனிக்கு சென்ற பிரியங்கா, துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். மேலும், இது எளிமை மற்றும் சுயமரியாதையின் சின்னம் எனக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் மக்களுடன் உரையாடிய பிரியங்கா, “இப்படி விமரிசித்து அவர் என்னை அவமானப்படுத்தவில்லை. சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்களாக உள்ள கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளை அவமானப் படுத்தியுள்ளார்.

உங்கள் அனைவருடன் சேர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள இங்கு வந்துள்ளேன். துடைப்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்வது சுயமரியாதைக்கான செயல் என்பதை யோகிக்கு தெரியப்படுத்தினேன். உத்தரப் பிரதேச முதல்வர் சாதிய ரீதியாக பேசி தனது தலித்-விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்” என தெரிவித்தார்.

சச்சின் டெண்டுல்கர் உள்பட வெளிநாடுகளில் ரகசியமாக சொத்துகளைக் குவித்த 91 நாடுகளின் பிரபலங்களின் பெயர்கள் வெளியீடு

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துகளைச் சட்டவிரோதமாக வாங்கிக் குவித்த இந்தியா, பாகிஸ்தான் உள்பட 91 நாடுகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் , அரசியல் தலைவர்களின் பெயர்களையும், வெளியிடப்படாத ஆவணங்களையும் பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 1.90 கோடி ரகசியக் கோப்புகள் இதில் அடங்கியுள்ளன. வெளியிட்ட அறிக்கையில், பாப் பாடகர் திவா சகிரா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மாடலிங் தொழில் செய்யும் கிளாடியா சிஃபர் ஆகியோர் வெளிநாடுகளில் வாங்கிக் குவித்த சொத்துகளின் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாடுகளில் வாங்கிய சொத்துகள், பல நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் பண்டோரா பேப்பர்ஸ் வெளிக் கொணர்ந்துள்ளது. மேலும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஜோர்டான் நாட்டின் அரசர், கென்யா, ஈக்வெடார் நாட்டின் பிரதமர்கள், உக்ரைன் அதிபர், செக் குடியரசின் பிரதமர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நிதிச் செயல்பாடுகள், ரஷ்யாவின் 130 கோடீஸ்வரர்களின் பெயர்கள், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிதொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்து அதன்பின் பேசினார். அப்பொழுது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கும்.

இன்று, நாட்டின் அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடுவது அல்லது சிகிச்சை அளிப்பது, அவர்களின் முயற்சிகள் தேசத்திற்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது உதவியது என்றார்,

நிர்வாகம் அதிரடி தகவல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பதவி ஏற்கும் விழாவில் ரஷியா, பாகிஸ்தான், சீனாவுக்கு அழைப்பு

அமெரிக்க படைகள் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கிய நிலையில் 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் வந்தது. இதையடுத்து தாலிபன்களால் கொல்லப்படலாம் என அஞ்சினாரா அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றார். இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதைதொடர்ந்து ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய பதக்கப்பட்டியலில் 24 இடத்திற்கு முன்னேறியது // பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 1999ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினர். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24 இடத்தில் உள்ளது.

பவினா படேல் வென்றது  முதல் வெள்ளி // நாட்டிற்கு போட்டது பிள்ளையார் ”சுழி”

குஜராத் மாநில மெக்சனா நகரைச் சேர்ந்த ஒரு  சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி பவினா ஹஸ்முக்பாய் படேல் பிறந்தார். பவினா படேல் 12 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோமைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை  அவரின் குடும்பத்தினர் தாமதாகவே கண்டுபிடித்தனர்.  பின்னர், பவினா படேல் கிராமத்திலுள்ள ஒரு சாதாரண பள்ளியில் தனது படிப்பை மேற்கொண்டார். பவினாபடேலுக்கு  9 வயது  அதாவது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், வயது சிறியவராக இருந்த பவினா படேல் அலட்சியம் மற்றும் சரியான மறுவாழ்வு உடற்பயிற்சிகளை செய்யாத காரணத்தால் பழைய நிலையையே அவர் தொடர வேண்டி இருந்தது. பவினா பட்டேலின் தந்தை ஹஸ்முக்பாய் படேல், பார்வையற்ற மக்கள் சங்கத்தின் விளம்பரத்தை 2004இல் பார்த்து குஜராத், அகமதாபாத்தில் உள்ள  நிறுவனத்தில் ஐடிஐ படிப்புக்காக அவரை சேர்த்தார்.

பின்னர், பவினா படேல் தொலைதூர கல்வி மூலம் குஜராத் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தபோது, தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி வந்ததை கண்ட லக்கியா, பவினா படேலை  லலன் தோஷியுடன் என்பவருடன் இணைத்துவிட்டார். லக்கியா மற்றும் லலன் தோஷி தான் உடற்தகுதிக்கான உடல் செயல்பாடுகளில் பவினா படேல் ஆர்வம் காட்ட தூண்டியிருக்கின்றனர்.

இதுவே பின்னாளில் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வழிவகை செய்தது மட்டுமின்றி தொழில் ரீதியாக டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி, பின்னர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பெங்களூருவில் நடந்த முதல் பாரா-டேபிள் டென்னிஸ் தங்கப் பதக்கத்தை வென்று தேசிய அளவில் பெயர் பெற்றார். பிறகு, சர்வதேச அளவில் தனது பெயரை உருவாக்கத் தொடங்கினார். பவினா படேலின் முதல் வெளிநாட்டு போட்டி ஜோர்டானில் நடந்த டேபிள் டென்னிஸில் கலந்து கொண்டு  பதக்கம் எதுவும் வெல்லாமல் நாடு திரும்பினார்.

அதன்பின்னர்  பவினா படேல்  கடினமாக உழைத்து டேபிள் டென்னிஸில் அனுபவத்தைப் பெற போராடினார். 2011 ஆம் ஆண்டில், தாய்லாந்து ஓபனில் தனது முதல் சர்வதேச வெள்ளி பதக்கத்தை வென்றார். பின்னர் 2013ல் ஆசிய பிராந்திய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார். அதன்பிறகு 2019ல் பாங்காக்கில் தனது முதல் தங்கத்தை வென்றார் பவினா படேல். தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் நிகுல் பட்டேலை 2017-ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர்,  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள்  9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட வீரர்களில் பவினா படேலும் ஒருவர்.

பவினா படேலுக்கு இந்த பாராலிம்பிக்ஸ் முதல் போட்டியில் சீனர்களின் பிடித்தமான விளையாட்டான டேபிள் டென்னிஸில் சீன வீராங்கனை யிங் சூ-வுக்கு எதிரான அந்த முதல் போட்டியில் மூன்று கேம்களையுமே தோற்று முதல் போட்டியில் படுதோல்வியை தழுவியிருந்தார். உலக அரங்கில் முதல் போட்டியில் இவ்வளவு மோசமாக தோற்ற  பவினா படேல்  தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கி இருந்தாலும் மறுநாள் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே பிரிட்டன் வீராங்கனைக்கு எதிராக 3-1 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வி தழுவி தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கியது.

அடுத்து மூன்றாவது போட்டி இரண்டு வீராங்கனைகளும் முட்டி மோதி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சராசரியாக 6 நிமிடத்தில் முடியும் போட்டிகள் 10 நிமிடத்துக்கு மேல் நீடித்தது. நிறைய சவால்களை கடந்து  பவினா படேல் 17-15 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று தன்னால் சாதிக்க முடியும் என்பதை தனக்கு தானே மன தைரியத்தை வளர்த்தார்.  இந்த வெற்றியின் மூலம், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.

பிரேசில் வீராங்கனைக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் நேருக்கு நேர் சரிசமமாக விளையாடி கடைசியில்  3-0 என்ற செட் கணக்கில்  பவினா படேல் வென்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனை பெரிக் ரேங்கோவிக்கை எதிர்கொண்டு போட்டியை மிக எளிமையாக வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி பவினா படேல் சீன வீராங்கனை ஷாங் மியாக்கு எதிராக மோதினர்.  சீன வீராங்கனை ஷாங் மியாக்கு உடன் போட்டியில் முதல் சுற்றில் தோற்றார். ஆனால் சற்று சுதாரித்த இரண்டாவது சுற்றை தன் வசப்படுத்தினர். இதனால் மூன்றாவது சுற்று மிகவும் கடினமாக அமைந்தது. இந்த மூன்றாவது   சுற்றையும்  தன் வசப்படுத்தினர். நான்காவது சுற்று மிகவும் கடினமாக சுற்று சீன வீராங்கனை ஷாங் மியாக் கைப்பற்றி போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது. கடைசி ஐந்தாவது சுற்று இதை வெல்பவரே  இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். ஐந்தாவது சுற்றில் முதலில்  சீன வீராங்கனை ஷாங் மியாக் 5 புள்ளிகள் பெற்ற நிலையில் போட்டியில் விஸ்பரூபம் எடுத்த பவினா படேல் சீன வீராங்கனை சிம்மசொப்பனமாக இருந்து கடைசி சுற்றில் அபார வெற்றி பெற்று 3-2 என அரையிறுதியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

வீல் சேரில் அமர்ந்தபடி இடது கையால் பந்தை விரட்டும் பவினா படேல் இந்த பாராஒம்பிக்கில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் பெரிச் ரன்கோவிச்சுக்கு கூட அதிர்ச்சி அளித்து ஆனால் தொடக்க லீக்கில் யாரிடம் தோற்றாரோ கடைசியில் இறுதி சுற்றிலும் அவரிடமே மீண்டும் தோற்று தங்க பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று பாராஒம்பிக்கிக் போட்டிகள் தொடங்கி நான்கு நாட்கள் முடிந்தும் பதக்க பட்டியலில் இடம்பெறாத தவித்தது வந்த நம் நாட்டிற்கு முதல் பதக்கத்தை பவினா படேல் உச்சிமுகர  வைத்தார்.