10 ஆண்டுகளா..? 10 மாதங்களா…? தாராபுரம் நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக இடையே பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர்மன்றக் அரங்கில் முதல் நகர சபை கூட்டம் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆணையாளர் ராமர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி 30 வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு குப்பை அகற்றுதல், சாலைகளை சீரமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக ஒரு வாரத்திற்குள் தீர்வு எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மன்றக் கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.

மேலும் அந்த கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் கடந்த 10 ஆண்டுகளில் நகராட்சியில் அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் அதிமுக ஆட்சி மெத்தனமாக செயல்படுவதாக தெரிவித்து மட்டுமின்றி வருங்காலங்களில் தாராபுரம் நகராட்சியை தூய்மையாக ஆக்கப்பட்டு படிப்படியாக அனைத்தும் வார்டுகளிலும் தேவைகளை பூர்த்தி செய்வதே எனது குறிக்கோள் எனதெரிவித்தார்.

அதுமட்டுமின்றி நகராட்சியில் எந்தவித பணம் இல்லாததால் உடனடியாக வருவாயைப் பெருக்க அனைத்து உறுப்பினர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து 9-வது வார்டு முதல் 30-வது வார்டு வரை உள்ள உறுப்பினர்களை அந்தந்த வார்டு குறைகளை கேட்டறிந்தார் அப்போது பேசிய 22-வது வார்டு உறுப்பினர் அதிமுக நாகராஜ் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித அடிப்படை தேவைகளும் நடைபெறும் என்று தெரிவித்தார்கள் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் நிறைவடைந்து தற்பொழுது 10-வது மாதத்தை எட்டியுள்ளது இருந்தும் 10 மாதங்களாக ஏன் எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து குறுக்கிட்ட 21-வது வார்டு உறுப்பினர் துறை சந்திரசேகர் கடும் ஆட்சேபனை தெரிவித்து இதற்கு திமுக உறுப்பினர்கள் 1-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் 23-வது வார்டு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட திமுக உறுப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கடந்த அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது இதற்கு காரணம் என்றும் மெத்தனமாக கையாலாகா அரசு என்றும் திமுக உறுப்பினர் பேசியதால் கூட்டத்தில பரபரப்பு ஏற்பட்டது.

IND VS SA 3rd TEST: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடும் டெல்லி வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது.

இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் கேப்டன் டீன் எல்கரின் (3 ரன்) விக்கெட்டை பறிகொடுத்து 17 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் (8 ரன்), கேஷவ் மகராஜ் (6 ரன்) களத்தில் இருந்தனர். இன்று 2- ஆம் நாள் ஆட்டத்தில் பீட்டர்சென் (72 ரன்கள்) தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 76.3 ஓவர்கள் தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகள், முகம்மது ஷமி 3 விக்கெட்டுகள் மற்றும் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளளை கைப்பற்றினர். இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடக்கத்திலேயே இன்று இந்திய ரன் ஏதும் எடுக்காத நிலையில் புஜாரா ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த வேகத்தில் ரஹானே 1 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 19 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 58 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லி வீரர்களான விராட் கோலி (கேப்டன்) மற்றும் ரிஷப் பண்ட் அணியை மீட்க போராடி வருகின்றனர்.

ஒரு யூனிட் மணல் ரூ.1000 ஆக நிர்ணயம்: 24 மணிநேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை

கடந்த 2013-ம் ஆண்டு ஆற்று மணல் ஒரு யூனிட் விலை ரூ.300 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளி வியாபாரம் செய்ய குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதில் முறைகேடுகள் எழுந்ததால் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை நீர்வள ஆதாரத்துறை விதித்துள்ளது.

மேலும், ஆற்று மணலுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவின் போதே மணல் அள்ளிச்செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும். மணல் முன்பதிவுக்கான செயலியும் புதுப்பிக்கப்படும்.

அதன்படி, தற்போது ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணல் வேண்டுவோர், மணல் டிப்போக்களில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் பணம் செலுத்தலாம். ஆற்று மணலுக்கு பதிவு செய்யும்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அனுமதி தேவை. மணல் எடுக்கப்படும் குவாரிகளில் அனைத்து நிகழ்வுகளும் 24 மணிநேரமும் ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். இதுமட்டுமின்றி மணல் தொடர்பான, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வி.கே. சசிகலா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கன மழையால் பல்வேறு முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்க்களை வழங்கி வருகிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த வி.கே. சசிகலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க அறிவுறுத்தல்…

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இரவு முழுக்க வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்க பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. தொடர்ந்து மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எப்பொழுதுமே தண்ணீர் தேங்கும் அரங்கநாதன் சுரங்கப்பாதை, வியாசர்பாடி,  மேட்லி சுரங்கப்பாதை, ராயபுரம், ரங்கராஜபுரம். திருவொற்றியூர், மாணிக்கம் நகர், கணேஷபுரம் உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகள் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகையால், சுரங்கப்பாதைகளின் வழியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளர்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக, கல்வி துறை சார்பில், செயல்படுத்தப்பட உள்ளது. இந்தநிலையில், தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது அதில்,

* சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்

* எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக பணியாற்றுவோரைத் தேர்வு செய்தல் கூடாது

* விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம்

* பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்

* கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும்.

* குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்

* இணையதளங்களில் பதிவு செய்தவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

* பள்ளிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய / மாவட்ட அளவிலான குழுக்கள் சரிபார்த்தல் அவசியம்.

* தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் கைது

வேலூர் மாவட்ட சத்துவாச்சாரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் உதவி பொது மேலாளராக மகேந்திரமாலி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, நிலுவை தொகைக்கான காசோலையை, காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜெயச்சந்திரன் என்பவருக்கு உதவி பொது மேலாளர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன் தொடர்ந்து கேட்கவே அவர் காலதாமதம் செய்து வந்தார்.

காசோலை வழங்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயச்சந்திரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஜெயச்சந்திரனிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுக்க, அந்த பணத்தை நேற்று ஜெயச்சந்திரன் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு சென்று மகேந்திரமாலியிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மகேந்திரமாலியை கையும், களவுமாக பிடித்தனர்.

நில அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சூவிழிராஜாவிற்கு சொந்தமான விவசாய நிலம் எலச்சிபாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளரிடம் மனு கொடுத்தார்.

சூவிழிராஜா மனு கொடுத்து ஒரு மாத காலமாக நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் வருவாய் ஆய்வாளர் காலம் தாழ்த்தி வந்தால், இதுகுறித்து சூவிழிராஜா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் விசாரித்தார்.  அதற்கு வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே நிலத்தை உடனடியாக அளவீடு செய்து கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சூவிழிராஜா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சூவிழிராஜாவிடம் வழங்க, லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் ரூ.5 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் வழங்கபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர்.

மருத்துவ கல்வி இயக்கம்: பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் இருக்கிறன்றன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி படிப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டு மாணவா் சோக்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதனை http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நவம்பா் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். மேலும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.