பெண்கள் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசிய மகாவிஷ்ணு கைது..!

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். “நான் வேற மாதிரி பேசிருவேன்! உங்களுக்கு எப்படி பேசணும்? தலைமை ஆசிரியையிடம் கேட்ட மகாவிஷ்ணு ” அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை தொடங்கியது. திருப்பூரில் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான இடத்தில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். ஆனால், மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருப்பது பின்னர்தான் தெரிய வந்தது.

அதே நேரம் மாற்றுத்திறனாளிகள் கொடுத்த புகாரின் பேரில்

192 – கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது,

196 (1) (a) சமூகத்தில் வெறுப்பான தகவல்கள் தகவல்களை பரப்புவது.

352 பொது அமைதியை குழைக்கும் வகையில் பேசுவது.

353 (2) மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அட்டூழிய குற்றங்களுக்கான தண்டனை

சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் BNS இல் 4 பிரிவுகளில் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவை காவல்துறை கைது செய்ய தீவிரம் காட்டி வந்த நிலையில் இன்று மதியம் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை காவல்துறை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது.

பள்ளிக்கல்வி துறை அதிரடி: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சி நடத்த கூடாது..!

சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் பாவ – புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்றும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கர் என்றமாற்றுத் திறன் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்த வீடியோ காட்சிகள், வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை தவறாக வழிநடத்துவதா என கேள்வி எழுப்பி, அசோக் நகர் பள்ளி முன்பு, பல்வேறு மாணவர் அமைப்பினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழலில், பள்ளிக்கல்வி துறை சார்பில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத் திறன் ஆசிரியர் சங்கருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாகபள்ளிக்கல்வி துறை இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதுதுறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும். நிகழ்ச்சிக்கு பிறகு, 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமும் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.தமிழரசி, திருவள்ளூர் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டுஅணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசோக் நகர் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மதியம் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் காணொலியில் உடனடியாக ஆலோசனை நடத்தினார். ‘‘பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் கல்வி சார்ந்து இயங்குபவர்களாக இருக்க வேண்டும். துறை அனுமதியின்றி தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பயிற்சி முகாம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. சுற்றறிக்கைகூட சரியாக தயாரிக்க தெரியாத சிலரால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்’’ என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் விரும்பினால் என்ன செய்வது..! தன்மானம் தான் முக்கியம்..!

‘அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்று நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது, எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி தெவிரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது.

அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் என்றுமே அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. தலைவர்களைப்பற்றி அவதூறாக பேசுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதனை ஏற்க மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

 

மகாவிஷ்ணு ஆதரவாக ஹெச் ராஜா! ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும்..!

ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்தார்.சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில், அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு மாணவிகள் மத்தியில் முன் ஜென்மம் பாவ புண்ணியம் குறித்தெல்லாம் பேசியுள்ளார். அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.மேலும் பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று அடுத்த சில நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றமும் செய்யப்பட்டார். காவல்துறையினரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராக விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் ஹெச் ராஜா கருத்து கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது ஹெச் ராஜா, “இந்த திராவிட மாடல் என்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது என்ன தெரியுமா.. நீதி போதனை வழக்குகளை ரத்து செய்தார்கள். ஆட்டையைப் போட வந்தவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அறம் செய்ய விரும்பு எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் அதை நீக்கிவிட்டார்கள்.மேலும், ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என்றும் அதை எதிர்க்கக்கூடாது என ஹெச் ராஜா தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விநாயகர் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி அனைத்து வளமும் பெற்ற வாழ்த்துக்கள் ..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அருகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர் தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய் நொடி இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், உளமார்ந்த ‘விநாயகர் சதுர்த்தி’ வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ்: அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்..!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கையை விதைத்த பேச்சாளரை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார்.

அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியுள்ளார். கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது.

அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வழக்கமாக பள்ளிக்கு ஆண்டு விழா நடத்துவதற்கே சில ஆயிரம் ரூபாய் மட்டும் தான் செலவிடப்படும். ஆனால், மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளது. தம்மை மகாவிஷ்ணு என்று கூறிக்கொண்ட அந்த நபருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்?

அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியர் தீய பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க நீதிபோதனை வகுப்புகளை நடத்துங்கள் என்று பா.ம.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யாத பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிகழ்ச்சிகள் இனியும் நடப்பதை அனுமதிக்கக்கூடாது.

சென்னை அசோக்நகர் பள்ளியில் நடந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு இந்த சிக்கலை மூடி மறைத்து விடக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் எத்தகைய உயர்பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbil Mahesh Poyyamozhi: மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும்…!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பின்னர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளி மாணவர்கள் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது. அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு வேண்டும். ” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார் மேலும் ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார்.

மு.க.ஸ்டாலின்: பள்ளி நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்..!

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

NEET: மருத்துவ கலந்தாய்விற்கு 1.50 லட்சம் போலி தரவரிசை சான்றிதழ் கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர்..!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் நீட் தேர்வு முடிவுப்படி தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடந்து வருகிறது. அதன்படி, நடைபெற்ற கலந்தாய்வில், மருத்துவம் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது. அப்போது மாணவர் ஒருவர் தன்னுடைய பெயர் வரிசைப்படி ஏன் அழைக்கவில்லை என்று அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

பிறகு தகராறு செய்த மாணவனை அழைத்து அவர் வைத்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில் தகராறு செய்த அந்த மாணவனின் பெயர் போலியாக தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆவணம் எனத் தெரிந்தது.

உடனே அதிகாரிகள் மாணவன் மற்றும் அவனுடன் வந்த அவரது தந்தையை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி காவல்துறை விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் எடுத்துள்ளார்.

பிறகு நீட் தேர்வில் 429 மதிப்பெண் பெற்றிருந்தார். தனக்கு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக மாணவனின் தந்தை, திருப்பத்தூர் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் வெங்கடாஜலபதி என்பவரிடம் ரூ.1.50 லட்சம் பணத்தை கொடுத்து மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்திருந்ததும், பல நாட்கள் தனது மகனின் பெயர் பட்டியலில் இல்லாததால், வெங்கடாஜலபதியிடம் தகராறு செய்ததும், அப்போது வெங்கடாஜலபதி நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்த மாணவனின் பெயரை எடிட் செய்து சேர்த்து அந்த போலி சான்றிதழை பதிவிறக்கம் செய்து மாணவனின் தந்தையிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் வெங்கடாஜலபதி கொடுத்த போலியான தரவரிசை சான்றிதழை எடுத்து கொண்டு மாணவன் மற்றும் அவரது தந்தை நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவன் அளித்த புகாரின் படி, போலி நீட் தேர்ச்சிக்கான தரவரிசை சான்றிதழை தயாரித்து கொடுத்த வெங்கடாஜலபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anbil Mahesh Poyyamozhi: பள்ளியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரம் அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும்..!

சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழி மற்றும் சொற்பொழிவு சம்பந்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தில் இன்று பேசுபொருளானது.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறவிருப்பதால் போராட்டக்காரர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.