திருப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை உடனடி ரத்து செய்..!

திருப்பூர் மாநகரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை NH – 381 A ல் வேலம்பட்டியிலும், வேலம்பட்டியில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் SH – 81 ல் காதப்புள்ளப்பட்டியிலும், வேலம்பட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பல்லடம் நோக்கி செல்லும் சாலையில் NH – 81 ல் மாதப்பூரிலும் சுங்கச்சாவடிகள் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

National Highways Fee rules – 2008 , Rule 8 (1) ன் படி நகராட்சி பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது, ஆனால் தற்போது பல்லடம் நகராட்சி எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு உள்ளேயே சுங்கச்சாவடி சட்டவிரோதமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தல் அமைக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்த சுங்கச்சாவடி வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ளது. மேற்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதி 8 (2) ன் கீழ் மாதப்பூரில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி விதிகளுக்கு முரணானதாகும்.

அவிநாசி பாளையத்திலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி செல்லும் வழியில் காதப்புள்ள பட்டியில் மாநில நெடுஞ்சாலை SH – 81 இல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி வேலம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஒரே திசையில் நோக்கி செல்லும் போது 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று மேற்கண்ட விதி 8 (2) கீழ் தேசிய நெடுஞ்சாலைய ஆணையம் விதியை வகுத்துள்ளது, ஆனால் விதிகளை மீறி மாநில நெடுஞ்சாலை துறை சுங்கச்சாவடி அமைத்து வருகிறது.

திருப்பூரின் தெற்கு பகுதியில் 20 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது சிறு – குறு தொழில் முனைவோர்களையும், விவசாயிகளையும் சுரண்டுவதற்கு வழிவகுக்கும். இந்தப் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், பள்ளி – கல்லூரிகள் அமைந்துள்ளன. மேலும் திருப்பூருக்கு கொண்டு வரப்படும் அனைத்து காய்கறிகளும் திருப்பூரின் தெற்கு பகுதியில் இருந்து இந்த சுங்கச்சாவடிகளை கடந்து தான் வருகிறது, எனவே இந்த சுங்கச்சாவடிகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வசூல் செய்யப்படும் போது திருப்பூர் மாநகரத்தில் உள்ள பொதுமக்களும், சிறு – குறு தொழில் முனைவோர்களும், கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலை வருகிறது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடமும், மாநிலத்தில் ஆளும் திமுகவிடமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி இந்த சாலைகள் அனைத்துமே நூறாண்டுகளுக்கு மேலாக மக்களின் வரிப்பணத்தில் நிலம் எடுப்பு செய்யப்பட்டவைகள், பெரும்பாலான புதிதாக நிலம் எடுப்பு செய்யாமலும், ஒரு சில இடங்களில் மட்டுமே நிலமெடுப்பு செய்து, அகலப்படுத்தி விட்டு புதிதாக சாலை அமைத்ததற்கு இணையாக கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது தவறானதாகும்.

ஒரு வாகனத்தை வாங்கும் போதே சாலை வரியும், மற்றும் பல்வேறு வரிகளை நாட்டிற்காக செலுத்தும் பொது மக்களை, தொழில் முனைவோர்களை சுங்கச்சாவடிகள் அமைத்து அதிகமாக கசிக்கி பிழியக்கூடாது. திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் ஏற்கனவே மிகக் கடுமையாக நசிந்து வருகிறது, இது போன்ற சூழலில் ஒரே பகுதியில் 20 கிலோ மீட்டருக்குள் விதிகளை மீறி மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டால் பயணம் செய்வது மிகுந்த கவலைக்குரியது ஆகிவிடும்.

எனவே மத்திய அரசு வேலம்பட்டியிலும் மாதப்பூரிலும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளையும், தமிழ்நாடு அரசு காதபுள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடி திட்டத்தையும் ரத்து செய்து திருப்பூர் மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எல்.முருகன்: புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படும்

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரியநிதி வழங்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் எல்.முருகன் தொடர்ந்து பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம், ஆரம்பக் கல்வியை தாய் மொழியான தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தற்போதைய காலகட்டத்தில், புதியதொழில் நுட்பத்துக்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், உரிய நிதி வழங்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த்: காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் அணை போர்க்கால அடிப்படை கட்டப்பட வேண்டும்..!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேற்றப்பட்ட காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை சாதகமாக்கிக் கொண்டு, உடனடியாக மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசை, கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு கீழே புதிய அணைகள் கட்டி, உபரி நீரைத் தேக்க இயலாது. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில், ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63 டிஎம்சி தண்ணீரைத் தேக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு தேக்கப்படும் நீரை மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவும், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியைத் தடுக்கவும் ராசிமணலில் அணை கட்ட வேண்டியது அவசியமாகும். இதற்கான பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

உயர்நீதிமன்றம் கேள்வி: முதலமைச்சர் ஒப்புதல் அளித்தது ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்..!

ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” முன்கூட்டியே விடுவிக்கக் கோரி கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

ராமதாஸ் வலியுறுத்தல்: வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்..!

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. எனவே, வில்லங்க சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை ஆணையிட்டிருக்கிறது. பத்திரப்பதிவுத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையும் பத்திரப்பதிவு செய்யலாம் என்பதற்காக பத்திரப்பதிவுத் துறை கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. சர்ச்சைக்குரிய சொத்துகள் மீது நீதிமன்றங்கள் எந்த ஆணையையும் பிறப்பிக்காத நிலையில், அதன் விற்பனையை தடுக்கக் கூடாது என்று சில வழக்குகளில் நீதிமன்றங்கள் வழிகாட்டியிருப்பதாகவும், வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளை பத்திரப்பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறை கூறியுள்ளது. இது அபத்தமானதாகும்.

பத்திரப்பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய, நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகளையெல்லாம் பதிவு செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. வழக்குகளில் சிக்கியுள்ள சொத்துகள் மீது எந்த ஆணையும் பிறப்பிக்கப்படாத நிலையில், அதை பதிவு செய்யலாம் என்று நீதிமன்றங்கள் கூறியிருந்தால், அதை அந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துடன் மட்டும் தான் பொருத்திப் பார்க்க வேண்டுமே தவிர, அனைத்துச் சொத்துகளுக்கும் அந்த வழிகாட்டுதலை பின்பற்ற முடியாது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதைப்போலவே பிறருடைய சொத்துகள் அபகரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பத்திரப் பதிவுகள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். வருவாயை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு பத்திரப்பதிவுத் துறை செயல்படக்கூடாது.

உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே பல சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுகின்றன. அவ்வாறு அபகரித்த சொத்துகளை ஒருவர் இன்னொருவருக்கு விற்க முயலும் போது, அதை எதிர்த்து சொத்தின் உண்மையான உரிமையாளர் வழக்கு தொடரும் நிலையில், அந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை சொத்தை பதிவு செய்யாமல் இருப்பது தான் சரியானத் தீர்வு ஆகும். மாறாக, அந்த சொத்து தொடர்பான வழக்கில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவில்லை என்பதற்காக சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டால், மோசடி செய்தவர் பெரும் லாபத்துடன் தப்பி விடுவார். சொத்தின் உரிமையாளரும், அதை வாங்கியவரும், வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகளும் தான் பாதிக்கப்படுவார்கள். இதை பத்திரப்பதிவுத்துறை உணர வேண்டும்.

வழக்குகளில் சிக்கிய வில்லங்க சொத்துகளை பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அனுமதித்தால், அது சொத்துகளை அபகரிக்கும் செயலை ஊக்குவிப்பதாகவே அமையும். அத்தகைய அநீதிக்கு தமிழக அரசும், பத்திரப் பதிவுத்துறையும் துணைபோகக் கூடாது. எனவே, சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், அந்த சொத்துகளை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற உத்தரவை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை திரும்பப் பெற வேண்டும்.” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யால், தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது..!

“நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், நடிகர் விஜய்யால், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எம்ஜிஆரை தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் அரசியலில் வெற்றி அடையவில்லை என்ற தமிழகத்தின் தலைவிதிக்கு நடிகர் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல. உச்சத்தில் இருந்தவர் விஜயகாந்த். எதிர்கட்சி தலைவராக இருந்தவர். அவராலும் வெற்றி அடைய முடியவில்லை என ராம.சீனிவாசன் பேசினார்.

பாஜக விமர்சனம்: “திமுக பேருந்தில் பயணம் ஆனால் அதிமுக பேருந்திற்கு துண்டு போட்டுள்ளார் திருமாவளவன்”

“திமுக பேருந்தில் பயணம் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார்,” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் தலைமை திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளரும், வேலூர் பெருங்கோட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான பேராசிரியர் ராம.சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு தொல்.திருமாவளவன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார். திமுக பேருந்தில் பயணம் செய்யும் அவர், அதிமுக பேருந்திலும் துண்டு போட்டு வைத்துள்ளார். இதுதான், 2026-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் விடுத்துள்ள செய்தி. என்னை கவனமாக கையாளுங்கள், அதிமுக பக்கமும் நான் செல்வேன் என மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மாநாட்டுக்கு அழைத்ததுபோல் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைவிட்டால் எங்கே போவார்கள் என கூட்டணி கட்சிகளை திமுக நினைக்கிறது. திமுகவைவிட்டால் காங்கிரஸ் எங்கே செல்லும். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை வெளியே போக வேண்டும் என தோன்றுகிறது. ஆனால், கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சொல்வது போல், எங்கே போவது? என தெரியாமல் உள்ளனர்  என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

R. B. உதயகுமார் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம்..!

உசிலம்பட்டி அருகே நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி தருவதா எனக்கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் R. B. உதயகுமார் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலை அதிமுக பேரூர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் R. B. உதயகுமார் தலைமை வகித்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு கிளை செயலாளர்கள் நியமனம் தொடர்பாக, அங்கிருந்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா என கேள்வி கேட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எல்.முருகன்: பாஜகவில் தமிழகத்தில் 10 கோடி உறுப்பினர்கள்..! 11 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது இலக்கு..!

தமிழகத்தில் தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை நேற்று தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2-ஆம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சியாகும். தற்போது பாஜகவில் 10 கோடிஉறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுவிலக்கு மாநாடு அரசுக்கு எதிரானது அல்ல..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்; பூரண மதுவிலக்கில் உடன்பாடு உள்ள அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் யாரும் விசிகவின் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு குறித்து துறைரீதியாக ஆலோசித்த பிறகே கருத்து கூற இயலும். மக்களிடம் தங்கள் கட்சியின் கோரிக்கையை கொண்டு செல்வதற்காக விசிக மாநாடு நடத்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் அரசுக்கு பின்னடைவு அல்ல. மது விற்பனையை இந்த அரசு தொடங்கி அதற்காக மாநாடு நடந்தால்தான் பின்னடைவு. எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்தலாம்; அவை திமுகவை எதிர்ப்பதற்கு அல்ல.

கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியலுடன் தொடர்புபடுத்தி கூறுவது தவறு. விசிகவின் மதுவிலக்கு மாநாடு, அரசுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் முத்துசாமி பேசினார்.