ராமதாஸ் அதிரடி: “மது ஒழிப்பைப்பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான்”

மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான்.

ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக.

பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என ராமதாஸ் தெரிவித்தார்.

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்காலம்..! அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும்..!

இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தெரிவித்தார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். ஆனால் வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள்.வந்த உடன் இங்க என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது, இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்களின் புதிய சிந்தனை மற்றும் ஆற்றலை கட்சியில் இணைத்து, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம், கட்சியை இன்னும் வெற்றிகரமாக நடத்த முடியும் என துரைமுருகன் தெரிவித்தார்.

நா.முருகானந்தம்: மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது..!

சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்க செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமைதலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து பேசுகையில், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்

இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதி, அதை தடுக்கும் வகையில், நாட்டில் முதல்முறையாக தமிழக அரசு சட்டம் உருவாக்கியது. இதுபோன்ற சட்டம் வேறு மாநிலங்களில் இல்லை. இணையவழி விளையாட்டுகள் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிக அளவில், குறிப்பாக மாணவர்களிடம் வேகமாக பரவி வருகிறது. மனநிலை சார்ந்த குறைபாடாகவும் இதுமாறி வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் இது ஒருமுக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதை தவிர்ப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையும் அளிக்க வேண்டும். கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், இணையவழி கல்விக்கு மாறியபோதுதான், இந்த பழக்கம் அதிகமானது. இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்க செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நா.முருகானந்தம் தெரிவித்தார்.

கலைமகள் சபா சொத்துக்களை பிரித்து தர ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரி வழக்கு…!

கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை பிரித்துக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையில் உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசின் வணிக வரித்துறை செயலருக்கு கடந்த 2021 நவம்பரில் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், ‘உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்போது 60 முதல் 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலங்களை உறுப்பினர்களின் பெயர்களில் பங்கிட்டு வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.கமலநாதன், இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி. மோகனகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி, “கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ளது.

இந்தச் சூழலில் பதிவுத்துறை அதிகாரியை ரிசீவராக நியமிப்பது என்பது பொருத்தமாக இருக்காது. எனவே, இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை ரிசீவராக நியமித்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” என வாதிட்டனர். அதையடுத்து நீதிபதிகள், “இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும்” எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீமான் கேள்வி: திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா..?

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு தான் திமுக அரசு என சீமான் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருப்பத்தூர் வட்டாரத்தில் இருந்து வந்திருந்த மனு ஒன்றில் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதை அகற்றக் கோரி ஒருவர் மனு அளித்திருந்தார். அதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டார். புதரை சுத்தப்படுத்தியதாக சோமதாஸ் பதிலளித்தார். இதையடுத்து அமைச்சர் அந்த மனு அளித்தவரை உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மனுதாரர் புதர் அகற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சிடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்ததுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வுக்கூட்டத்தில் தவறான பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

சீமான் கேள்வி: புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?

தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா? என சீமான் கேள்வியெழுப்பினார்.

நா.முருகானந்தம்: உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் பாதிக்கும்..!

சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்க செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.

இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமைதலைமைச் செயலர் நா.முருகானந்தம் தொடங்கி வைத்து பேசுகையில், தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்

இணையவழி சூதாட்டம், விளையாட்டுகளின் தீமை கருதி, அதை தடுக்கும் வகையில், நாட்டில் முதல்முறையாக தமிழக அரசு சட்டம் உருவாக்கியது. இதுபோன்ற சட்டம் வேறு மாநிலங்களில் இல்லை. இணையவழி விளையாட்டுகள் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிக அளவில், குறிப்பாக மாணவர்களிடம் வேகமாக பரவி வருகிறது. மனநிலை சார்ந்த குறைபாடாகவும் இதுமாறி வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் இது ஒருமுக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதை தவிர்ப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையும் அளிக்க வேண்டும். கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், இணையவழி கல்விக்கு மாறியபோதுதான், இந்த பழக்கம் அதிகமானது. இணையவழி விளையாட்டுகள் இயற்கைக்கு மாறாக மாணவர்களை மாற்றுகின்றன. நிழல் உலகில் அவர்கள் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. உடல், மனரீதியாக மாணவர்களின் வளர்ச்சியை இணையவழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன. சீனா, ஜப்பானில் இளைஞர்கள், இளஞ்சிறார்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியம். அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகி இருக்க செய்ய வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் கடமை முக்கியமானது. மாணவர்களின் நடத்தைகளை கண்காணித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் முடிந்தவரை கைபேசியை கொடுக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் நுட்பங்களை மாணவர்கள், இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நா.முருகானந்தம் தெரிவித்தார்.

மதுபோதையில் அரசு மருத்துவமனையில் மயங்கி கிடந்த மருத்துவர்..!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிசிக்சைபெற்று வருகிறார்கள். 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் ஒருவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பணிக்கு வந்த அந்த மருத்துவர் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர் நோயாளிகளுடன் உடன் இருந்த உறவினர்களை ஒருமையில் பேசி திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.

மேலும் அவர் மதுபோதை மயக்கத்தில் மருத்துவமனை வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார். இதனை கண்டு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் போதை மயக்கத்தில் இருந்த அந்த மருத்துவர் மருத்துவமனைக்குள் செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த ஊழியர்கள், போதை மருத்துவரை காவலாளிகள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். இன்று காலை நீண்ட நேரத்திற்கு பின்னர் போதை தெளிந்ததும் அந்த மருத்துவர் புறப்பட்டு சென்று உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.