கலைஞர் 98வது பிறந்தநாளை முன்னிட்டு  கோவிட் -19 நிவாரணம் வழங்கும் பணி தீவிரம்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கலைஞர் அவர்களின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில், நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3,19,816 குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் -19 நிவாரணமாக ரூ 4 கோடி மதிப்பில் தலா 4 கிலோ அரிசி வழங்குவதற்காக அரிசி பைகள் பேக்கிங் செய்யும் பணியினை நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

காக்கும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மதிய உணவு வழங்கல்


முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மதியம், வேளச்சேரி – திருவான்மியூர், காக்கும் கரங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில், பகுதிச் செயலாளர் திரு.துரைகபிலன் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கினேன். இந்நிகழ்வில், வட்டச் செயலாளர் திரு.ராஜாராமன், கழக நிர்வாகிகள் முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயுமா?

மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற நாடோடிகள் படத்தின் நடிகை சென்னை பெசன்ட்நகரில் சாந்தினி வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

சுட்டெரிக்கும் வெய்யிலில்: எப்படிபட்ட காலத்திலும். களத்தில் ஊடகத்தினர்

கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி, சுட்டெரிக்கும் வெய்யிலில் ஊடகத்தினர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் காத்திருந்தனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு குறித்த ஆழமான ஆலோசனைகளுக்குப் பிறகு மாணவர் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் கூட “ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் உதவி செய்தவர் செந்தில்பாலாஜி

கோரிக்கை மனுவை வாங்க மறுப்பு: விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சுனைப்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த சுனைப்பட்டு நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் திறக்கக்கோரி மனு அளிக்க 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்தனர்.


அப்போது அலுவலர்கள் கொரோனா தொற்று காரணமாக விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தின் முன்பு தரையில் படுத்து உருண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல்

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார். உணவகம், செல்போன் கடை உள்பட 4 கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து திரும்பிய திருவாரூர், விழுப்புரத்தை சேர்ந்த 2 நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த புதுக்கோட்டை விராலிமலையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி:சீனாவில் இருந்து தமிழகம் வந்த 68 பேர் வீடுகளில் வைத்து கண்காணிப்பு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.


கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே ஹாங்காங், தாய்லாந்தில் தலா 8 பேரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மக்காவோ, சிங்கப்பூரில் தலா 5 பேரும், தென் கொரியா, மலேசியா, தைவான், ஜப்பானில் தலா 4 பேரும், பிரான்ஸில் 3 பேரும், இலங்கை, வியட்நாமில் தலா 2 பேரும், நேபாளம், ஜெர்மனி, கனடாவில் தலா 1 என மொத்தம் 16 நாடுகளில் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தினமும் சென்னை வரும் விமானத்தில் பயணம் செய்பவர்களை கண்காணிக்க சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்காக குடியுரிமை சோதனைக்காக தனியாக 10 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்கேனிங் கருவி மூலமாக பயணிகளின் உடல் சூட்டை வைத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டுபிடித்து, அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களுக்கான தனி உடைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 5 நாட்களாக சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் சோதனை செய்யப்படுகின்றனர். இதுவரை 15 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 10 சீனர்கள் உள்பட 68 பயணிகள் பொது இடங்களுக்கு செல்லாமல் அவர்களின் வீடுகளிலேயே தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.