Category: தமிழகம்
Tamilnadu
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென மொத்தம் 1,273 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஆக்சிஜன் படுக்கைகள், 678, தீவிர சிகிச்சை படுக்கைகள் 213 உள்ளன. பெரும்பாலும், நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவதால், செயற்கை சுவாச சிகிச்சை இன்றியமையாததாக உள்ளது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. அதேசமயம், ஆக்சிஜனுக்கும் சில நேரங்களில் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை சமாளிக்க, மருத்துவமனையில், ‘அக்வாசப்’ நிறுவனத்தின் மூலம், நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கருவி ஒன்று அமைக்கப்பட்டது. இக்கருவி, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.