ஆன் வெல் என்ற வாகன சேவையை கோவிட் -19 நோயாளிகளுக்காக அமைச்சர் கே.என் . நேரு தொடங்கி வைத்தார்

கோவிட் -19 நோயாளிகளுக்காக ஸ்மார்ட் லைப் ட்ரஸ்ட் மற்றும் சி.எஸ்.ஐ திருச்சி மற்றும் தஞ்சை மண்டலம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஆன் வெல் என்ற வாகன சேவையை அமைச்சர் கே.என் . நேரு தொடங்கி வைத்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசு சித்தா கோவிட் -19 மையத்தை அமைச்சர் கே.என் . நேரு பார்வையிட்டார்


கோவிட் -19 யை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சித்தா கோவிட் -19 மையத்தை அமைச்சர் கே.என் . நேரு பார்வையிட்டார். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்தார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவம்னையில் ஊழியர்களின் அலட்சியம்

கோயம்புத்தூர் போத்தனூர் பகுதியை சேர்ந்த டீ விற்பனை செய்யும் தொழிலாளி ரவி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிட -19 பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.


நேற்று ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளியை அழைத்து சென்ற ஊழியர்கள் காலி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி அழைத்து சென்றுள்ளார்கள். ஸ்கேன் மையம் முன்பு ஸ்டெச்சரை நிறுத்திவிட்டு ஊழியர்கள் சென்றதால் நோயாளி மூச்சுதினறி உயிரிழந்தார். அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலச்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்


கோவிட -19 தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் வரும் 20 ஆம் தேதிக்குள் கோவிட -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேஎண்டும் சுற்றறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றி இந்த சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவிலிருந்து ரயில் வந்த 80 டன் ஆக்சிஜன் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு

கோவிட் -19 நோயாளிகளின் சிகிக்சைக்காக ஒடிசா மாநிலம் பிலாயிலிருந்து 80 டன் ஆக்சிஜன், ரயில் மூலம் திருச்சி குட்ஷெட்டுக்கு வந்தடைந்தது. அந்த ஆக்சிஜ னைள் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத முத்தூஸ் மருத்துவமனை: கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை திருட்டு

கோயம்புத்தூர் சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையின் பெயர் ஒரு சில தினங்களாகவே செய்திகள் செய்திதாள்களில் வந்த வண்ணம் உள்ளது.

அதன்வரிசையில் கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை மருத்துவமனை லாக்கரில் வைக்கப்பட்ட நகை திருடப்பட்டது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி