சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் கோரிக்கை ஏற்பு

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பேரூராட்சி ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த சுபலா கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அவருக்கும், அவர் குடியிருந்து வரும் பகுதியிலும் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், உதவி கேட்டும் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் வீடியோ வெளியிட்டதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதனால் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கதறி அழுதபடி மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் நேற்று சுபலா வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.


அத்துடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பொதுமக்களின் கோரிக்கை படி அந்தபகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டு அங்குள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிக்கு பால், காய்கறி மற்றும் பழங்கள் வாகனங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. சுபலாவுக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். பகுதியில் உள்ள குடும்பங்களில் ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு மகளிர் திட்ட அதிகாரி மூலம் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் அனைத்து நலத்திட்டங்களையும் விரைந்து செய்து கொடுப்பதாக தோவாளை தாசில்தார் உறுதியளித்துள்ளார்.

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளாக கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியினையும், வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளையும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உண்மைக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்தக் குற்றச்சாட்டை மருத்துவர் ரவீந்திரநாத் அவர்கள் நிரூபித்துவிட்டால் தண்டனையையும் அவரே விதிக்கலாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் கோவிட் -19 தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் கே.என். நேரு ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் கோவிட் -19 தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தி வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் கோவிட் -19 ஒழிப்பது தொடர்பாக மேற்கொள்ள இருக்கும் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் வழங்கல்


கோயம்புத்தூர் மாநகராட்சியில் கோவிட் -19 தடுப்பு பணிகளை மேற்கொள்ள செவிலியர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பணியாற்ற தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 100 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை இன்று அமைச்சர் கே.என் . நேரு வழங்கினார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி , நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

வாழ்வாதாரம் இழந்த இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி

தமிழக அரசு கோவிட -19 காரணமாக முழுவதுமாக கட்டுப்படுத்தும் விதமாக எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்து இருந்தது. இதன் காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருளர் இன பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ப்ரீத்திபார்கவி, அவர்களுக்கு உதவும் விதமாக நேற்று திருவள்ளூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து 600 இருளர் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களின் கிராமங்களுக்கு 2 வாகனங்களில் ஏற்றி அனுப்பினார். பின்னர் அங்கு இருந்த இருளர் இன மக்களுக்கு மளிகை தொகுப்புகளை வழங்கினார். வாகனங்களில் சென்று வீடு வீடாக சென்று ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் என யாரும் சிரமப்படாமல் இருக்க அதிகாரிகள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட -19 வார்டில் ஆட்சியர் திடீர் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவிட -19 பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் மாநில அளவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மாவட்டத்தில் புதிதாக 2,645 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 51 பேர் உயிரிழந்தனர். மேலும், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 88 ஆயிரமாக அதிகரித்து உள்ளது.


இதனால், நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேற்று மாலை கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் கருணாநிதி 98-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, பணகுடி ரட்சண்ய சேனை ஆலய வளாகத்தில் ஏழைகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் வழங்கினார்.

மரம் இறக்குமதியாளர்கள் மற்றும் சா மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் முக கவசங்கள் வழங்கல்


தென்காசி மாவட்டம் செங்கோட்டை மரம் இறக்குமதியாளர்கள் மற்றும் சா மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட சுகாதார துறைக்கு முதற்கட்டமாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் 50 ஆயிரம் முக கவசங்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.