மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ‘கொரோனாவால் பாதித்த பொருளாதாரத்தை உயிர்ப்பித்து வருகிறோம்’

டெல்லியில் நேற்று ரூ.6.29 லட்சம் கோடி சலுகை தொகுப்புகள் தொடர்பான இணையவழி கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது, “எதிர்காலத்தில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு மெட்ரோ அல்லாத நகரங்களில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் கிராமப்புறப்பகுதிகளிலும், இரண்டாவது நிலை, மூன்றாவது நிலை நகரங்களிலும் மருத்துவ திறன்களை அதிகரிப்பது மிகமும் முக்கிமானதாக இருக்கிறது. சுகாதார உள் கட்டமைப்பில் ஒட்டுமொத்த முன்னேற்றமும், பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவப்போகிறது. இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக நிதி சேவைகள் துறையின் மூலம் வாரந்தோறும் கண்காணிப்பேன். இதில் தாமதங்களை சமாளிக்க முடியாது. கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை நாங்கள் உயிர்ப்பித்து வருகிறோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

 

உலகிலேயே உயரமான சாலையை லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறப்பு

இந்தியாவில் ராணுவத்தின் 58 என்ஜினீயர் பிரிவு அமைத்துள்ள இந்த சாலை, கேலா கணவாய் வழியாக செல்லும் லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும், 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகத்திலேயே உயரமான சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு முன், 18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த, கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலை உலகிலேயே உயரமான வாகன சாலையாக திகழ்ந்த நிலையில் இந்த சாலையை திறந்துவைத்த லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால், இது பொதுமக்கள் பயணிக்கக்கூடிய உலகிலேயே உயரமான சாலையாக இருக்கும் என்ன தெரிவித்தார்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நெத்தியடி

கடந்த 23 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற நிலையில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளின் முன்பு போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தை பாதுகாக்கும் விதமாக அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 10673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 81 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 143.43 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 2458 வழக்குகள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் முன் போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அந்த சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் செய்பவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பதில் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் குட்கா பாக்கெட் கொண்டு வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அது தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்தித்தார்.

இந்த சூழலில் அதே மு.க.ஸ்டாலின் இன்றைக்கு முதலமைச்சராக உள்ளபோது போதை பொருள் விவகாரத்தை கையில் எடுத்த பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினை கேள்வியால் மடக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலரையும் ஆச்சரியப்படும் விதத்தில் புள்ளி விபரங்களுடன் அதுதொடர்பான, பதிலை புட்டுபுட்டு வைத்தார். கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அசடு வழிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த நெத்தியடி பதிலுக்கு எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..!

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 8-வது நாளான இன்று காலையிலேயே இந்தியாவுக்கு ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர். சிங்ராஜ் 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், வருண் பாட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடக்கம் முதலே தொடர்ந்து மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருவரும் 1.73 மீ, 1.77மீ, 1.80 மீ, 1.83 மீட்டர் தூரத்தை தாண்டி முதலிடத்திற்கு போட்டி போட்டு வந்தனர். ஆனால் வருண் பாட்டி 1.80 மீட்டர் உயரத்தை தாண்ட முடியாமல் வெளியேறினார். இறுதியில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் இருவருமே சறுக்கலை சந்தித்தனர். 1.86 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தங்கவேலு தாண்டிவிட்ட நிலையில் ஷரத் குமார் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை.

இதனால் மாரியப்பன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சேம் க்ரேவ் அகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பரபரப்பு போட்டி இறுதியில் 1.88 மீட்ட உயரத்தை மாரியப்பனால் 3 வாய்ப்புகளிலுமே தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் சேம் க்ரேவ் தனக்கு வழங்கப்பட்ட 3வது வாய்ப்பில் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியானது. 3வதாக வந்த ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா // அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

கரூர் நகரில் வீட்டு உபயோகத்திற்கான தலையணை உறை, திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள், மெத்தை விரிப்பு, கையுறைகள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட கூடிய துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரூரில் இருந்து தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பபட்டு வருகின்றன.

கடந்த 23 -ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி இன்றைய தொழில்துறை மானிய கோரிக்கையின் போது, கரூர் மக்களின் நீண்டகால கனவான ஜவுளி பூங்கா அமைய அறிவிப்பு வெளியிட்டது

கரூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஜவுளி பூங்கா அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி செலவில்

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் அதிகப்படுத்த, சிப்காட் மூலம், 200 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்காவை, ஜவுளி பதனம் செய்யும் பிரிவு, ஆயத்த ஆடை தயாரிக்கும் பிரிவு, வீட்டு ஜவுளி உற்பத்திப் பிரிவு, உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை கூடம், கண்காட்சி கூடம், உற்பத்தி மேம்பாட்டு மையம், ஜவுளி வடிவமைப்பு மையம், பிரத்யேகமான திறன் மேம்பாட்டு மையம் போன்ற சிறப்பு அம்சங்களுடன் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி சபாநாயகர் அரசு மருத்துவமனை அனுமதி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இன்று காலை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், சபாநாயகர் செல்வம் பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது.

இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் விசாரித்தபோது, “சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கன்னியாகுமரி முதல் டெல்லி வரை சைக்கிள் பேரணி

நாட்டின் 75-வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் கடந்த 22-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கடல் சங்கமம் பகுதியில் தொடங்கி  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக  கர்நாடக மாநிலத்தை அடையும் இந்தப் பேரணியை ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்தப் பேரணி ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணிக்கும் பேரணிக் குழுவினர் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் பேரணியை நிறைவு செய்கின்றனர். நேற்று மாலை தருமபுரி வந்து சேர்ந்த இந்தப் பேரணிக் குழுவினருக்கு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், மேள, தாளங்களுடன் வரவேற்பு அளித்தார்.

 

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 8 வது நாளான இன்று இந்திய ஷூட்டிங் குழுவினரின் அற்புதமான ஓட்டத்தை தொடங்கினர். இதில் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா ஆகியோர் அசாகா ஷூட்டிங் ரேஞ்சில் நடந்த ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இல் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றனர். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மணீஷ் நர்வால், இறுதிப்போட்டியில் 135.8 புள்ளிகளுடன் ஏழாவது இடம் பிடித்தார்.

தகுதி சுற்றில் ஆறாவது இடத்தில் இருந்த சிங்கராஜ், இறுதிப் போட்டியின் முதல் கட்டத்தில் தரவரிசையில் முதலிடம் பெற அற்புதமாகத் தொடங்கினார்.  இறுதிப் போட்டியில் மொத்தம் 216.8 புள்ளிகளுடன் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (SH1) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.

தமிழிசை: நீட் தேர்வு பணம் படைத்தோர் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை மாற்றியுள்ளது

ஏழை- எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருபுவனை எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச நீட் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். மேலும் பேசுகையில், “ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. கிருஷ்ண பகவான் அவதரித்த நாளில் மக்களைக் காப்பாற்றுவதற்காக அரக்கர்களை அழித்ததைப் போல, தடுப்பூசி மூலம் கரோனா என்ற அரக்கனை அழிக்க மருத்துவராகப் போகும் மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

நான் அடிப்படையில் ஒரு மருத்துவராக இருப்பதனால் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஏழை மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் மருத்துவர் ஆகலாம். நீட் என்பது நல்ல தேர்வு. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இப்போது மாறி இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

 

பவினா படேல் வென்றது  முதல் வெள்ளி // நாட்டிற்கு போட்டது பிள்ளையார் ”சுழி”

குஜராத் மாநில மெக்சனா நகரைச் சேர்ந்த ஒரு  சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி பவினா ஹஸ்முக்பாய் படேல் பிறந்தார். பவினா படேல் 12 மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோமைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை  அவரின் குடும்பத்தினர் தாமதாகவே கண்டுபிடித்தனர்.  பின்னர், பவினா படேல் கிராமத்திலுள்ள ஒரு சாதாரண பள்ளியில் தனது படிப்பை மேற்கொண்டார். பவினாபடேலுக்கு  9 வயது  அதாவது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், வயது சிறியவராக இருந்த பவினா படேல் அலட்சியம் மற்றும் சரியான மறுவாழ்வு உடற்பயிற்சிகளை செய்யாத காரணத்தால் பழைய நிலையையே அவர் தொடர வேண்டி இருந்தது. பவினா பட்டேலின் தந்தை ஹஸ்முக்பாய் படேல், பார்வையற்ற மக்கள் சங்கத்தின் விளம்பரத்தை 2004இல் பார்த்து குஜராத், அகமதாபாத்தில் உள்ள  நிறுவனத்தில் ஐடிஐ படிப்புக்காக அவரை சேர்த்தார்.

பின்னர், பவினா படேல் தொலைதூர கல்வி மூலம் குஜராத் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தபோது, தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி வந்ததை கண்ட லக்கியா, பவினா படேலை  லலன் தோஷியுடன் என்பவருடன் இணைத்துவிட்டார். லக்கியா மற்றும் லலன் தோஷி தான் உடற்தகுதிக்கான உடல் செயல்பாடுகளில் பவினா படேல் ஆர்வம் காட்ட தூண்டியிருக்கின்றனர்.

இதுவே பின்னாளில் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வழிவகை செய்தது மட்டுமின்றி தொழில் ரீதியாக டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கி, பின்னர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பெங்களூருவில் நடந்த முதல் பாரா-டேபிள் டென்னிஸ் தங்கப் பதக்கத்தை வென்று தேசிய அளவில் பெயர் பெற்றார். பிறகு, சர்வதேச அளவில் தனது பெயரை உருவாக்கத் தொடங்கினார். பவினா படேலின் முதல் வெளிநாட்டு போட்டி ஜோர்டானில் நடந்த டேபிள் டென்னிஸில் கலந்து கொண்டு  பதக்கம் எதுவும் வெல்லாமல் நாடு திரும்பினார்.

அதன்பின்னர்  பவினா படேல்  கடினமாக உழைத்து டேபிள் டென்னிஸில் அனுபவத்தைப் பெற போராடினார். 2011 ஆம் ஆண்டில், தாய்லாந்து ஓபனில் தனது முதல் சர்வதேச வெள்ளி பதக்கத்தை வென்றார். பின்னர் 2013ல் ஆசிய பிராந்திய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் புதிய வரலாறு படைத்தார். அதன்பிறகு 2019ல் பாங்காக்கில் தனது முதல் தங்கத்தை வென்றார் பவினா படேல். தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் நிகுல் பட்டேலை 2017-ல் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின்னர்,  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள்  9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட வீரர்களில் பவினா படேலும் ஒருவர்.

பவினா படேலுக்கு இந்த பாராலிம்பிக்ஸ் முதல் போட்டியில் சீனர்களின் பிடித்தமான விளையாட்டான டேபிள் டென்னிஸில் சீன வீராங்கனை யிங் சூ-வுக்கு எதிரான அந்த முதல் போட்டியில் மூன்று கேம்களையுமே தோற்று முதல் போட்டியில் படுதோல்வியை தழுவியிருந்தார். உலக அரங்கில் முதல் போட்டியில் இவ்வளவு மோசமாக தோற்ற  பவினா படேல்  தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கி இருந்தாலும் மறுநாள் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலேயே பிரிட்டன் வீராங்கனைக்கு எதிராக 3-1 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வி தழுவி தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கியது.

அடுத்து மூன்றாவது போட்டி இரண்டு வீராங்கனைகளும் முட்டி மோதி மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். சராசரியாக 6 நிமிடத்தில் முடியும் போட்டிகள் 10 நிமிடத்துக்கு மேல் நீடித்தது. நிறைய சவால்களை கடந்து  பவினா படேல் 17-15 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று தன்னால் சாதிக்க முடியும் என்பதை தனக்கு தானே மன தைரியத்தை வளர்த்தார்.  இந்த வெற்றியின் மூலம், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.

பிரேசில் வீராங்கனைக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் நேருக்கு நேர் சரிசமமாக விளையாடி கடைசியில்  3-0 என்ற செட் கணக்கில்  பவினா படேல் வென்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனை பெரிக் ரேங்கோவிக்கை எதிர்கொண்டு போட்டியை மிக எளிமையாக வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறி பவினா படேல் சீன வீராங்கனை ஷாங் மியாக்கு எதிராக மோதினர்.  சீன வீராங்கனை ஷாங் மியாக்கு உடன் போட்டியில் முதல் சுற்றில் தோற்றார். ஆனால் சற்று சுதாரித்த இரண்டாவது சுற்றை தன் வசப்படுத்தினர். இதனால் மூன்றாவது சுற்று மிகவும் கடினமாக அமைந்தது. இந்த மூன்றாவது   சுற்றையும்  தன் வசப்படுத்தினர். நான்காவது சுற்று மிகவும் கடினமாக சுற்று சீன வீராங்கனை ஷாங் மியாக் கைப்பற்றி போட்டி 2-2 என சமநிலைக்கு வந்தது. கடைசி ஐந்தாவது சுற்று இதை வெல்பவரே  இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும். ஐந்தாவது சுற்றில் முதலில்  சீன வீராங்கனை ஷாங் மியாக் 5 புள்ளிகள் பெற்ற நிலையில் போட்டியில் விஸ்பரூபம் எடுத்த பவினா படேல் சீன வீராங்கனை சிம்மசொப்பனமாக இருந்து கடைசி சுற்றில் அபார வெற்றி பெற்று 3-2 என அரையிறுதியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

வீல் சேரில் அமர்ந்தபடி இடது கையால் பந்தை விரட்டும் பவினா படேல் இந்த பாராஒம்பிக்கில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் பெரிச் ரன்கோவிச்சுக்கு கூட அதிர்ச்சி அளித்து ஆனால் தொடக்க லீக்கில் யாரிடம் தோற்றாரோ கடைசியில் இறுதி சுற்றிலும் அவரிடமே மீண்டும் தோற்று தங்க பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று பாராஒம்பிக்கிக் போட்டிகள் தொடங்கி நான்கு நாட்கள் முடிந்தும் பதக்க பட்டியலில் இடம்பெறாத தவித்தது வந்த நம் நாட்டிற்கு முதல் பதக்கத்தை பவினா படேல் உச்சிமுகர  வைத்தார்.