டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார்.

20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளது.

சட்ட நூலகத்தை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ரிப்பன் வெட்டி திறப்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு

நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுபவர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல காவல் பொது ஆய்வாளர் சுதாகர் தலைமையில் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ் குறித்து, அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கழுகுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் கழுகுகளால் நன்மைகள், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் வேலைப் பார்த்து வருகிறார். எடின்பரோ கோமான் கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு தமிழருவி இணையதளத்தில் இருந்து புரஜெக்டர் உதவியுடன் எடின்பரோ கோமான் பாடம் நடத்தினார். இதில் கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் பங்கேற்றனர். அப்போது திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. பின்னர் ஆபாச படம் வெளியானது குறித்து அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ மற்றும் மாணவிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தான் ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது எப்படி? என்பது தெரியவரும் என்றும், விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை காவல் ஆணையர் எச்சரிக்கை.!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெண்ணிடம் நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமண இணையதளத்தில் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.3.45 லட்சம் பணம் பறித்த வழக்கு மற்றும் நடிகர் ஆர்யா பெயரை பயன்படுத்தி ஜெர்மனிவாழ் இலங்கை பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கு உள்பட ‘சைபர் கிரைம்’ தொடர்பான முக்கிய வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


அப்போது கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த காவல் நிலையங்களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று காவல் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். எனவே தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி: 3 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 270/3

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது முதலே இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் வெளியேறினார். அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த ரோகித் சர்மா சதம் விளாசினார். வெளிநாட்டு மண்ணில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார்.

ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் 61 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 22 ரன்களிலும் ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 தினங்கள் எஞ்சியுள்ளதால், ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாரா ஒலிம்பிக்: பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று அசத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மீண்டும் ஒரு வெண்கலப் பதக்கம் வெல்ல மற்றும் வீரர் மணிஷ் நார்வால் தங்க பதக்கம் வென்று அசத்தினார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் இறுதி போட்டியில் இறுதிபோட்டியில் ஒடிசாவை இந்தியாவை சேர்ந்த 33 வயதான பிரமோத் பகத் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 35 வது இடத்திலிருந்து பல படி முன்னோக்கி சென்று 26 வது இடத்தில் உள்ளது.

பொது மக்களை காவல்துறையினர் ‘வாடி… போடி’ ‘வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது- உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்த அணில் குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழிமறித்த சேர்தலா காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில், என மகளின் முன் ‘எடா… வா, போ’ என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் அவமரியாதையாக என்னை பேசினர் என மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் காவல்துறையினர் பொது மக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை காவல்துறையினர் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது. காவல்துறையினரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ‘வா, போ’ என ஒருமையில் அழைத்து பேச கூடாது. ‘எடா… எடீ…’ மற்றும் ‘வாடி… போடி’ என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள காவல்துறை டி.ஜி.பி., அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியா வீரர்கள் அசத்தல்!

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 11-வது நாளான இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் ஏற்கனவே, இந்தியாவின் ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்து தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் 15 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஒரு படி முன்னோக்கி சென்று 35 வது இடத்தில் உள்ளது.