பி.டி.டி.சால்களில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறையினர், மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம் மும்பையில் ஒர்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பி.டி.டி. சால்கள் அமைந்துள்ளன. தற்போது பெரும்பாலான பி.டி.டி. சால் கட்டிடங்கள் அபாயநிலையில் உள்ளதால், சால்களை சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வர்ஷா பங்களாவில் ஆலோசனை நடத்தினார்.


அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பி.டி.டி.சால் சீரமைப்பு திட்டத்தில் ஒருவருக்கு கூட வீடு இல்லாமல் போய்விடக்கூடாது, இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல பி.டி.டி.சால்களில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறையினர், மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.