மலையாள திரை உலகில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை. இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அனைத்துத் துறைகளிலும்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களில் தெரிய வருகிறது என கூறியிருந்தார். சீமானின் இந்தப் பேட்டிக்கு பதில் தரும் வகையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார். அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க? அவங்க கேள்வி கேட்டது பாலியல் குற்றச்சாட்டு பற்றி.. அதாவது நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையை 14 வருஷமாக சீரழிச்சு தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமல் கர்நாடகாவில் தூக்கி அநியாயமாகப் போட்டீங்களே அதான் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.
2008-ம் ஆண்டு நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நின்னோமே. அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே ! மறந்துட்டீங்களா?
6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன் அதை மறந்துவிட்டீங்களா? நீங்க எல்லா கேடு கெட்ட வேலையையும் செய்துவிட்டு போன வருஷம் ரூ50,000 கொடுத்துடறேன். திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? ஆனால் இந்த டீலை பேசிவிட்டு என்னையும் திமுகவையும் சேர்த்து வைத்து கொச்சை கொச்சையாக பேசுறீங்களே அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என் கூட சப்போர்ட்டுக்குதான் வீரலட்சுமி வந்தாங்க. அவங்களை என்ன என்ன கொச்சையா நீங்க பேசினீங்க? காளியம்மாளை பிசிறு.. ம… என பேசியதை மக்கள் மறந்துவிடுவாங்களா?.. என விஜயலட்சுமி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.