மாமியார் பிறந்த நாளுக்கு ரூ.1 கோடிக்கு பரிசு தந்த மருமகள்!

பெரும்பாலான வீடுகளில் 10-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மாமியார்- மருமகள் இடையே மோதல் என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம். ஆனால், இப்போது இந்த மோதல் எல்லாம் குறைந்து, ஓரளவுக்கு நிலைமை பரவாயில்லை என்றே சொல்லலாம். ஆனால், நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. அங்கு மாமியாருக்கு மகள் கொடுத்த கிப்ட்டை பார்த்தால் நிச்சயம் ஒரு நொடி நீங்கள் ஸ்டன் ஆகிவிடுவீர்கள்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகேஷிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாயகி என்பவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்குப் பிறகு எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் சுகேஷின் தாயார் பவானிக்கு 50-ஆவது பிறந்த நாள் வந்துள்ளது. தனது மாமியாரின் 50-வது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்த ஸ்ரீரங்கநாயகி அட்டகாசமான ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறார். மாமியார் பிறந்த நாளுக்கு உற்றார் உறவினர்களை அழைத்து பிரம்மாண்ட விழா நடத்தி இருக்கிறார்.

மாமியார் வீட்டின் உள்ளே கால் அடி எடுத்து வைத்த உடன் பூக்கள் தூவி வரவேற்பு அளித்து, கலர் கலர் புஸ்வானமும் ஒளிர மாமியார் ஒரு நொடி வாயடைத்துப் போய்விட்டார். அதன் பிறகு பவானியை மேடை ஏற்றி கேக்கையும் வெட்ட ஸ்ரீரங்கநாயகி வைத்துள்ளார். 50-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மாமியாருக்கு, 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் பணத்தை ரொக்கமாக ஸ்ரீரங்கநாயகி கொடுத்து இருக்கிறார்.

மேலும், தங்கம் விலை பறந்து கொண்டு இருக்கும் சூழலில் 100 கிராம் எடைகொண்ட இரு தங்கக் கட்டிகளையும் பரிசாகக் கொடுத்துள்ளார். மேலும், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் என கிப்டுகளை வாரி வழங்கியுள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார். இதை எல்லாம் பார்த்து மாமியார் பாவனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார்.