நர்சிங் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களின் பிறப்புறுப்பில் டம்பள்ஸை தொங்கவிட்டு ராகிங் செய்த கொடூர சம்பவத்தில் 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கண்ணூரில் 11-ஆம் வகுப்பு மாணவர் மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி சீனியர் மாணவர்கள் அவரின் கைகளை உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை , சீனியர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூனியர் மாணவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் பிறப்புறுப்புகளில் டம்பள்ஸ்களை தொங்கவிட்டு கொடுமை செய்தனர்.
அதேபோல் காம்ப்ஸ் வைத்து மாணவர்களின் உடலிலும் காயத்தை ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் இதனை வீடியோவாக எடுத்து பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து விரக்தியடைந்த ஜூனியர் மாணவர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து, சீனியர் மாணவர்கள் 5 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. தொடர்ந்து ராகிங் தடுப்பு சட்டத்தின் போது 5 மாணவர்களையும் காவல்துறை கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடந்த 2 நாட்களிலேயே பள்ளியிலும் ராகிங் கொடூரத்தால் 11-ஆம் வகுப்பு மாணவரின் கைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கண்ணூரில் இயங்கி வரும் கொளவலூர் P R நினைவுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சீனியர்கள் மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி, முகம்மது நிஹாலை ராகிங் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவரை துன்புறுத்திய சீனியர்கள், அவரின் கைகளை உடைத்து சித்ரவதை செய்து இருக்கின்றனர்.
மாணவன் முகம்மது நிஹால் தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சீனியர் மாணவ்கர்கள் 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.