மம்தா பானர்ஜி ஆவேசம்: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரியும்..!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பாஜகவுக்கு சவால் விடும்படி பேசினார்.