மரண தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் மம்தா பானர்ஜி ஆதங்கம் தெரிவித்துள்ளார். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு விதித்துள்ளது.
இது குறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில், ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், இன்றைய தீர்ப்பில், இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது உண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய அரிதான வழக்கு என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என்ற முடிவுக்கு எவ்வாறு வரமுடிந்தது? இந்த கொடூரமான வழக்கில் மரண தண்டனையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சமீப காலங்களில் இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய முடிந்தது. ஆனால், இந்த வழக்கில், மரண தண்டனை ஏன் வழங்கப்படவில்லை? இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.