சென்னை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த மும்பை ஏர் இந்தியா விமானத்தில் புகுந்து ஒரு இளைஞரை தட்டி தூக்கியது. அதேபோல ஐதராபாத் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை இளைஞரை தட்டித் தூக்கிய சம்பவம் ஒரு சினிமா சூட்டிங் போல என விமானத்தில் இருந்த பயணிகள் நினைத்துக்கொண்டு பயணித்து மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் இறங்கி செல்லும்போது விமான நிலையத்தில் இருந்த தொலைக்காட்சி காட்சிகளில் சென்னையில் அதிகாலையில் நடைப் பயிற்சி சென்ற பெண்கள், கடைக்கு சென்ற பெண்கள், சாலையில் தனியாக சென்ற பெண்கள் என 8 பேரிடம், 8 வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று காலை 6 முதல் 7.10 மணிக்குள் அடுத்தடுத்து மூதாட்டிகளை குறிவைத்து நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் சென்னை நகரத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
செயின் பறிப்பில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலம் சூரத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிக்க முயன்றபோது சம்பவம் நடந்த 3 மணி நேரத்திலேயே சென்னை காவல்துறை தட்டி தூக்கினர் என செய்திகள் ஒளிபரப்பப்பட்டதை பார்த்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் ஒரு நிமிடம் திகைத்து நிற்கின்றனர்.
அஜித்குமாரின் விவேகம் திரைப்பட பாணியில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் கருப்பு நிற கர்நாடக பதிவு எண் கொண்ட வட மாநில இளைஞர்கள் 3 பேரில் ஜாபர் குலாம் ஹுசைன், சுராஜ் என்ற 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரை திசை திருப்ப விமான நிலையத்தில் இருந்து முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சல்மான் ஹிமானி சென்று அதன் பின்னர் கோயம்பேட்டில் இருந்து ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்ற சல்மான் ஹிமானி சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கும் பினாகினி எக்ஸ்பிரஸில் மூலம் தப்பிச்செல்ல சல்மான் ஹிமானி கைது செய்ய ரயில்வே காவல்துறை உதவியுடன் ஆந்திராவிலுள்ள ஓங்கோலில் ரயில் நிலையத்தில் தட்டி தூக்கினர்.
இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற ஒரு சில மணித் துளிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறை செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கியதில் இவர்கள் சிக்கியது தெரியவந்தது. மேலும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில், தரமணி ரயில் நிலையம் அருகே நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட நகைகளை மீட்க காவல்துறையினர் ஜாபர் குலாம் ஹுசைனை அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, ஜாபர் குலாம் ஹுசைன் காவல்துறையினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றபோது காவல் ஆய்வாளர் முகம்மது புகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாபர் குலாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.
கடை எண்: 4839 பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம் போன்றவை அருகே இருப்பதால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் அரசு இயந்திரம் அசைந்து கொடுக்கவில்லை. கடந்த 2012-ல் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று ‘மது போதைக்கு எதிரான பொது மக்கள் இயக்கம்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மீது நம்பிக்கை இழந்ததால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 19.03.2013-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டு, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற 20.02.2014 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விடாது இனி உடனே கடையை மூடிவிடுவார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம். கடை வழக்கமாக உற்சாகத்துடன் இயங்க கொதித்தெழுந்த மக்கள் அன்றைய தினமே போராட்டத்தைத் தொடங்க, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட தேதிக்குள் கடையை இடம் மாற்றிவிடுவதாக உறுதி அளித்து கடிதம் கொடுக்க, இப்படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் எட்டு முறை கடிதங்களைத் தந்ததே தவிர, கடையை மூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த போராட்டம் 1000 நாளை நெருங்குவதை ஒட்டி அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு காந்தியவாதி சசிபெருமாள் வரவழைக்கப்பட்டார். ஆனாலும் இந்த மதுக்கடை மூடப்படவில்லை போராட்டம் 1,031-வது நாளை எட்டியிருந்தது.
முடிவேதும் இல்லாமல் போராட்டம் நீடிப்பதை விரும்பாத சசிபெருமாள் ஜூலை 31- ஆம் நாள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதற்காக இருநூறு அடி உயர அலைபேசி கோபுரத்தின் உச்சிமீது ஏறி உச்சி வெயிலில் நின்று ரத்தவாந்தி எடுத்து அங்கேயே உயிரிழந்தார். அதுவரை சசிபெருமாளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழக ஊடகங்களும், அரசியல்கட்சிகளும் அவருடைய இறப்புக்கு பிறகு அடுத்த சில தினங்களுக்கு மது விலக்கு பற்றிய விவாதங்கள் நடத்தினர். தொலைக்காட்சிகளில் இது விவாத பொருளானது, அரசியல் கட்சிகள் மதுவிலக்கு பற்றிய உறுதி மொழிகள் மறக்காமல் அளித்தனர். ஆனால், அந்த பரபரப்பு அடங்கிய சில தினங்களிலேயே அந்த உறுதிமொழிகள் காற்றில் பறந்தது.
இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்திகள் செய்தித்தாள்களில் வந்த வண்ணமே இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகில் கூலிப்படையால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சிக்க தொடங்கினர். இதையடுத்து, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் சந்தீப்ராய் ரத்தோருக்கு பதிலாக சென்னையின் 110-வது காவல் ஆணையராக அருண் IPS அவர்கள் ஜூலை 8-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சியில் கொடிக்கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட லாட்டரி அதிபர் எஸ்.வி.ஆர். மனோகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 20 பேர் கைது செய்தவர். அந்தக் கும்பலுக்குத் துணைபோனதாக 11 காவலர்கள் அதிரடி பணியிடை மாற்றம் என லாட்டரி எதிராக நடவடிக்கை எடுத்தவர். ‘காவல்துறையினர் சொந்த வாகனங்களில், ‘போலீஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக்கூடாது’ என அதிரடி உத்தரவு போட்டவர்., போலி வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள், அதிவேக வாகன ஓட்டிகளுக்கு என அத்தனைக்கும் அருண் IPS அதிரடி காட்டியவர்.
இந்நிலையில், நாட்டின் 78-வது சுதந்திர தினத்தன்று திண்டிவனம் அருகே கீழ்சிவிரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் என ஆட்சியாளர்களை வசைபாடியதை யாராலும் மறக்கமுடியாது.
கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற மூலகாரணமே இந்த போதைப்பொருள்களே என்பதை உணர்ந்து அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற அருண் IPS அவர்கள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில், போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் அரும்பாக்கம் பகுதியில் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த தீபக் – டாலி மேத்தா தம்பதியினரும் அவர்களது நண்பருமான முத்துகுமரனை கைது செய்தது தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை மணியடித்தது. இவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த காவல்துறை அடுத்தடுத்து அதிரடிகளுக்கு அடித்தளமிட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு சென்ற தனிப்படை காவல்துறை மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்த பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ், அந்தோணி ரூபன் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த அபித் கிளாப்டனின் ஆகிய மூன்று நபர்களை தட்டி தூக்கியது. அவர்களிடம் நடைபெற்ற கிடுபிடி விசாரணையில், ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் சென்னை பல போதைப்பொருள் ஏஜெண்ட்டுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வருவது தெரியவந்தது.
அதன்பின்னர் விஸ்வநாதன் னை தமிழக காவல்துறை பொடிவைத்து தூக்க திட்டம் தீட்டியது. அதனடிப்படையில், விஸ்வநாதனிடம் தனிப்படை காவல்துறை ஒரு ஏஜென்டுகள் போல் பேசிய போதைப் பொருள் வேண்டும் என்று கூறி வரவழைத்தடனர். அதன்பின்னர் மாதவரம் பேருந்து நிலையம் அருகே வந்த விஸ்வநாதன் மற்றும் அவனது கூட்டாளி காவல்துறையினர் மறைந்து இருப்பது தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தபோது சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பொதுமக்கள் மத்தியில் சுற்றி வளைத்து கைது செய்து போதைப்பொருள் கடத்தும் ஆசாமிகள் அடி வயிற்றில் புளியை கரைத்தது.
இதன்பின்னர், வெளிநாடுகளில் இருந்து கொகைன் என்ற பயங்கர போதை பொருளை நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் SRM கல்லுரிக்கு சுத்து போட்டதுடன் நிற்காமல் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, இதற்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் காவல் ஆணையர் ரவீந்திரநாத்தின் மகன் அருணை காவல்துறை கைது செய்தது. மற்றொரு புறம் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் விசாரணை தீவிர படுத்தப்பட்டு அந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த கொலை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதான திருவேங்கடம், காவல்துறை விசாரணையின் போது தப்பிக்க முயற்சித்ததால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்ததாக காக்காதோப்பு பாலாஜி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர். கடந்த செப்டம்பர் மாதம் காக்காதோப்பு பாலாஜி காவல்துறை விசாரணையின் போது ஆயுதத்துடன் தாக்க முயற்சித்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
அதாவது சென்னை காவல் ஆணையர் அருண் IPS தலைமையில், குற்ற ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, ரவுடிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை காவல் ஆணையர் அருண் IPS கடந்த 9 மாத பணிக்காலம், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. என்கவுன்ட்டர்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், சென்னையில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. மேலும் சென்னையில் அதிகரித்து வரும் குற்றங்களை குறைக்க குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், மீது அருண் IPS அவர்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் ஆக்க்ஷனில் இறங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.