பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அரசும் காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், போதைப் பொருள்கள் புழக்கம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், போதைப் பொருள்கள் புழக்கம், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வண்ணமே உள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கே சீரழித்து வருகின்றனர். இதுகுறித்து அரசும், பல சமூக அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வந்தாலும் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம் அருகே தனது மகனின் ஒழுங்கீன செயல்பாடுகளைத் தாங்க முடியாமல் பெற்ற மகனை தாயே வெட்டிக் கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மேதரவீதியில் வசிக்கும் சாலம்மா என்கிற கடம் லட்சுமி.. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பிறகும் எருமைகளை பராமரித்து மகன்களை வளர்த்து வந்தார். இரண்டு மகன்கள் திருமணம் செய்து கொண்டனர், மூன்றாவது மகன் ஷியாம்பாபு, மற்றொரு மகன் திருமணம் செய்து கொள்ளவில்லை. மூன்றாவது மகன் ஷியாம்பாபு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மதுவுக்கும், கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளார். மேலும் ஷியாம்பாபு அதோடு நிற்காமல் தான் ஜாலியாக இருக்க திருட்டுச் சம்பவங்களிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளார்.
கெட்ட பழக்கம், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஷியாம்பாபு, உறவினரின் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் தாய் கண்டித்துள்ளார். அதன்பிறகு, கர்னூல் மாவட்டத்தில் திருடும்போது பிடிபட்ட ஷியாம்பாபு, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். தாய் லட்சுமி மற்றும் குடும்பத்தினர் கர்னூலுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஷியாம் பாபுவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். சில நாட்களாக மது போதையில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். மகனின் இத்தகைய செயல்களை கண்டான் தாய் மகனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, லட்சுமி தேவி தனது மகனை கோடாரியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் சேர்ந்து ஷியாம்பாபுவின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டை கொண்டு கட்டியுள்ளார். பின்னர், அந்த உடலின் பாகங்களை கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார். பெற்ற மகனைக் கொன்றுவிட்டு லட்சுமி தேவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.