நியாய விலைக்கடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் .மகேந்திரன் பூமி பூஜை செய்து வைப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சி, போடிபட்டி, காமராஜ் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 10 லட்சம் மதிப்பில், நியாய விலைக்கடை அமைக்க மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் .மகேந்திரன் அவர்கள், பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உடுமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்போகநாதன், மாவட்ட கழக துணைச் செயலாளர் .பார்த்தசாரதி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் அண்ணா தொழிற்சங்கம் .தங்கவேல், சஞ்சய் செல்வராஜ், ஒன்றிய கழக துணை செயலாளர் திரு செந்தில்குமார், சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள் புரட்சித்தலைவி பேரவை திரு அருள்ராஜ், இளைஞரணி திரு சிவக்குமார், கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்கம் .கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் எம்ஜிஆர் மன்றம் திரு செல்வராஜ், பாசறை கௌதம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் முத்துக்குமார், ஆறுச்சாமி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் சேதுராமன், மகளிரணி துணை செயலாளர் வைஷ்ணவி, கிளைக்கழக செயலாளர்கள் ரமேஷ், நாகமுத்து, விஜயக்குமார், ரங்கநாதன், செந்தில்குமார், மணிகண்டன், நந்தகுமார், ஜெயமணி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.