சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகர் விந்தியா பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது, 2 சீட்டுக்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். இத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன். கோயிலைப் பற்றி கேவலமாக பேசுகிறார். தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுகிறார்.
தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.திமுகவை எதிர்த்து கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார். ஷேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்த வைகோ, திமுகவை உடைத்து மதிமுகவை உருவாக்கினார் என நடிகை விந்தியா பேசினார்.