தமிழக வீராங்கனைகள் கலந்து கொண்ட தேசியளவிலான கபடிப் போட்டியில் நடுவர் தமிழக வீராங்கனையைத் தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்றது வருகிறது. அதன்படி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின் போது ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது நடுவர் திடீரென தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தர்பாங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் ஃபவுல் அட்டாக் நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் முறையிட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் முதலில் ஃபவுல் அட்டாக் தொடர்பாக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்வது தெரிகிறது. பின்பு, ஒரு வீராங்கனை அங்கிருந்து கிளம்பிய நிலையில், அவரிடம் வந்த நடுவர் அவரை தாக்கியது போல இருக்கிறது. உடனடியாக அங்கு அனைவரும் ஒன்றுகூட கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முறையீடு செய்த பல்கலைக்கழக பயிற்சியாளர் பாண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கைதும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.