ஜெயக்குமார்: ஆளுநர் ரவி அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை..!

சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த உகந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி மாநில அரசைக் குறை சொல்கிறாரோ தவிர, தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “தமிழகத்தில் எந்த பிரச்சினை தான் இல்லை.. சட்ட ஒழுங்கு பிரச்சினை இருக்கு, கஞ்சா பிரச்சினை இருக்கு. அராஜகம், அட்டூழியம் இருக்கிறது.. காவல்துறைக்கே கூட பாதுகாப்பான சூழல் இல்லை. இப்படியிருந்தால் இங்கு யார் தான் பணியாற்ற முன்வருவார். இந்தச் சூழலை வைத்துப் பார்த்தால் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த உகந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி மாநில அரசைக் குறை சொல்கிறாரோ தவிர, தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை” என ஜெயக்குமார் தெரிவித்தார்.