குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு..!

கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களுக்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாஜக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜே எஸ் அறிவழகன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் பாமக மாவட்ட செயலாளர் சன் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.