தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு திருமாவளவன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோரே காரணம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசி இருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் நடைபெற்ற உலக பிராமணர்கள் நலச்சங்கத்தின் 11 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசுகையில், சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை. கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை. இன்று ஆவணக் கொலைக்கு காரணமே சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான். நீங்கள்தான் ஆணவக் கொலை செய்ய தூண்டி விடுகிறீர்கள். அன்று நீங்கள் பிறக்காததால் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இன்று நீங்கள் இருப்பதால், அரிவாள் எடுக்கிறார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிரான உண்மை நிலையை, நாம் நம் மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என எச்.ராஜா பேசினார்.