Skip to content
India First

India First

  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்

உதயநிதி ஸ்டாலின்: உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்..!

“உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம்; கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான திரு.அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு துறை (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Author rajaramPosted on 30/10/2024Categories டுவிட்டர்Tags 24H Dubai 2025, Ajith Kumar, car race, Congratulations, Porsche 992 GT3 Cup Class, SDAT Logo, The European 24H Series Championship, Udhayanidhi Stalin

Post navigation

Previous Previous post: செல்பி எடுக்க சென்றபோது பாறை இடுக்கில் விழுந்த கல்லூரி மாணவி..! 20 மணி நேரத்துக்கும் மேலாக‌ போராடி மீட்பு..!
Next Next post: எல்.முருகன் விமர்சனம்: திமுக என்கிற நரகாசுரனை விரைவில் ஒழிக்கப் போகிறோம்..!

.

Archives

  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்
India First Privacy Policy Proudly powered by WordPress
India First @ Copy Right 2021 Learn more
India First
  • செய்திகள்
    • உலகம்
    • இந்தியா
    • தமிழகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
  • இ பேப்பர்
  • டுவிட்டர்
  • விளையாட்டு
  • மருத்துவம்
  • இயற்கை உணவு
  • வீடியோக்கள்
  • ஜோதிடம்
  • சட்டம்